சனி, 21 பிப்ரவரி, 2026

டி20 உலகக் கோப்பைத் : நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையேயான சூப்பர் 8 சுற்று போட்டி - முதல் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிப்பு !!!

SHARE

 டி20 உலகக் கோப்பைத் : நியூசிலாந்து - பாகிஸ்தான் இடையேயான சூப்பர் 8 சுற்று போட்டி - முதல் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிப்பு...

ஐ.சி.சி டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கான போட்டிகள் இன்று (பிப்ரவரி 21) முதல் தொடங்குகிறது. கொழும்பில் பிரேமதாசா திடலில் நடைபெறும் முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்றன.

நியூசிலாந்து, பாகிஸ்தான் இரண்டு அணிகளுமே சூப்பர் 8 சுற்றுக்கான போட்டிக்காக மிகவும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். நியூசிலாந்து அணியைப் பொருத்த வரையில், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தருகின்றனர். ஆனால், மிடில் ஆர்டர் பேட்டர்கள் பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தவறுகிறார்கள்.

கிளன் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மார்க் சாப்மேன் மற்றும் டேரில் மிட்செல் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவிக்கத் தவறுகின்றனர். கிளன் பிலிப்ஸ் மற்றும் ரச்சின் ரவீந்திரா தலா ஒரு அரைசதம் அடித்துள்ளனர். அதைத் தவிர்த்து, பேட்டிங்கில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் நன்றாக விளையாடவில்லை.

லீக் சுற்றின் நான்கு போட்டிகளில் விளையாடிய ரச்சின் ரவீந்திரா 72 ரன்கள் எடுத்தார். அதில் 59 ரன்கள் கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் எடுத்தது.

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணி முதல் முறையாக கொழும்பில் விளையாட உள்ளது. அந்த அணிக்கான வெற்றி வாய்ப்புக்கு சிக்கலாக அமைந்து உள்ளது. அதே சமயம், பாகிஸ்தான் அணி பிரேமதாசா திடலில் இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ளது. அதனால், பிரேமதாசா திடலின் தன்மை குறித்து நியூசிலாந்தைக் காட்டிலும் பாகிஸ்தான் அணிக்கு நன்றாக தெரியும்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: