வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை; இந்த மாவட்டங்களில் இடி மின்னலுக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !!!

SHARE

 தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை; இந்த மாவட்டங்களில் இடி மின்னலுக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !!!

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக்கம் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் மற்றும் தேனி ஆகிய 6 மாவட்டங்களில் பிப்ரவரி 21 - ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

மேலும், பிப்ரவரி 22-ம் தேதி 22-ம் தேதி திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக் கூடும் என்றும் வட தமிழகத்தில் இந்த 2 நாட்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. அதில் கூறும்போது: 

பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகக்கூடும்.

20-02-2026 தமிழகத்தில் ஓரிடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

21-02-2026 தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிடங்களில் பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

22-02-2026 தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், மிதமான மழை பெய்யக் கூடும். திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

23-02-2026 முதல் 25-02-2026 வரை தமிழகத்தில் ஓரிடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

 20-02-2026 மற்றும் 21-02-2026 ஆகிய நாட்களில் வட தமிழக மாவட்டங்களில் ஓரிடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

 23-02-2026 முதல் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் வரை உயர்ந்து காணப்பட வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.

19-02-2026 & 20-02-2026: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

 தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

மேற்கூறிய நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: