கிடுகிடு சரிவில் ஆபரணத் தங்கம் : சவரனுக்கு ரூ.640 குறைந்தது - இன்றைய நிலவரம் இதோ !!!
சர்வதேச பொருளாதாரச் சூழல் மற்றும் முதலீட்டாளர்களின் போக்கு காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கடந்த சில நாட்களாகக் கடும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், நேற்று கிடுகிடுவென உயர்ந்த விலை இன்று சற்று குறைந்து சாமானிய மக்களுக்குச் சிறிதளவு ஆறுதல் அளித்து உள்ளது.
இன்றைய விலை நிலவரம்:
நேற்று ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்திய தங்கம், இன்று மீண்டும் சரிவுப் பாதையில் திரும்பி உள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து உள்ளது. இதன்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.1,15,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் கணக்கில் பார்த்தால், கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,420-க்கு விற்பனையாகிறது.

0 கருத்துகள்: