ஏழைகளின் எட்டாக்கனியாகும் தங்கம்... ஒரே நாளில் ரூ. 5,200 உயர்வு !!!
ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் இருமுறை உயர்ந்து மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
கடந்த சில மாதங்களாக தங்கம் - வெள்ளி விலை ஏற்ற இறக்கங்களை கண்டு வருகின்றது. அதன்படி, இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது தங்கம் - வெள்ளி இரண்டுமே விலை உயர்ந்த நிலையில், மாலையில் வர்த்தகம் நிறைவு பெறும் போது மீண்டும் உயர்ந்து உள்ளது.
காலை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 300 உயர்ந்து ரூ. 15,200-க்கும், ஒரு சவரன் ரூ. 2,400 உயர்ந்து ரூ. 1,21,600-க்கு விற்பனையானது.
மாலை நிலவரப்படி, கிராமுக்கு மேலும் ரூ. 350 உயர்ந்த நிலையில் ஒரு கிராம் ரூ. 15,550-க்கும், சவரனுக்கு ரூ. 2,800 உயர்ந்து ரூ. 1,24,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ. 650-ம் சவரனுக்கு ரூ. 5,200-ம் உயர்ந்து உள்ளது.
பிப்ரவரி 23 ஆம் தேதி ரூ.180 உயர்ந்து ரூ.14,860 ஆக இருந்தது. அது முதலே விலை உயர்வானது 100 ரூபாய்க்குள் நாள்தோறும் ஏற்றம் இறக்கத்தோடு காணப்பட்டு பெரிய அளவில் அதிர்ச்சி கொடுக்காமல் இருந்த நிலையில், வாரத்தின் இறுதியில் ரூ.300 உயர்ந்து கிராமுக்கு ரூ.15 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.
வெள்ளி விலை காலை நிலரப்படி ரூ. 5 உயர்ந்து ரூ. 300-க்கும், கிலோவுக்கு ரூ.5000 உயர்ந்து ரூ, 3,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மாலை நிலவரப்படி மேலும் ரூ. 20 உயர்ந்து கிராமுக்கு ரூ. 320 ஆகவும் கிலோவுக்கு ரூ. 2 ஆயிரம் உயர்ந்து ரூ. 3,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வாரம் வெள்ளி விலை சிரிய அளவில் ஏற்ற - இறக்கங்களை கண்டு வந்த நிலையில் இன்று ஒரே நாளில் ரூ. 25 உயர்ந்து உள்ளது.
ஏழைகளின் எட்டாக்கனியாக தங்கம் - வெள்ளி விலை மாறி வருவது மக்கள் மத்தியில் கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது.

0 கருத்துகள்: