தி.மு.க விருப்ப மனு : கால அவகாசம் நீட்டிப்பு - பொதுச் செயலாளர் துரைமுருகன் !!!
சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் விருப்ப மனு அளிப்பதற்கான கால அவகாசத்தை தி.மு.க நீட்டித்து உள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் விருப்ப மனு அளிப்பதற்கான கால அவகாசத்தை தி.மு.க நீட்டித்து உள்ளது. இதற்கு முன்னதாக மார்ச் 2 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் கூடுதலாக 4 நாள்கள் அவகாசம் அளித்து நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதாவது மார்ச் 6 ஆம் தேதி மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை வழங்கலாம் என்று தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், நடைபெறவிருக்கும் தமிழ்நாடு புதுச்சேரி மாநில சட்டப் பேரவை பொதுத்தேர்தலுக்கு கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் 20-2-2026 முதல் 2-3-2026 வரை தலைமைக் கழகத்தில் விண்ணப்பித்திட வேண்டுமென ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து, கழகத் தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளான 1.3.2026 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு மேல் விண்ணப்பம் பெறப்படும். மேலும் கழகத் தலைவர் ஸ்டாலினிடம் நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் வேண்டுகோள் வைத்ததற்கு இணங்க, 6-3-2026, வெள்ளிக்கிழமை, மாலை 5.00 மணி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
https://x.com/arivalayam/status/2027762743340896339?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2027762743340896339%7Ctwgr%5E0bdbf9336da6b363f9c0283111fe188e5d8e2fbc%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Flatest-news%2Fstate-news%2Fdmk-extends-deadline-for-submitting-nominations-until-march-6th%2Farticleshow%2F128889908.cms
தமிழ்நாடு - புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம்: பொதுத் தொகுதிக்கு 25,000/- என்றும் மகளிருக்கும் மற்றும் தனித் தொகுதிக்கும் ரூ.15,000 செலுத்த வேண்டும்.
விண்ணப்ப படிவம் தலைமைக் கழகத்தில் ரூ.1,000/- வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்: