கூட்டணி ஆட்சிக்கான சூழல் தற்போது இல்லை - திருமாவளவன் பேட்டி
2026 சட்டசபை தேர்தலை ஒட்டி தி.மு.க - காங்கிரஸ் இடையேயான கூட்டணி விவகாரம் இழுபறியில் இருந்து வருகிறது. காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட ஒரு சாரார் ஆட்சியில் பங்கு என்கிற கோரிக்கையை வலியறுத்தி வருகிறார்கள். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், "காங்கிரஸில் சிலர் கூறும் சொந்த கருத்துகளை பொருட்படுத்த தேவையில்லை. தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கான சூழல் தற்போது இல்லை என நினைக்கிறோம். வலதுசாரி கட்சிகள் மேலோங்கும் நேரத்தில் ஆட்சியில் பங்கு கேட்டால் கூட்டணி பலவீனமடையும். கூட்டணி ஆட்சி கோரிக்கையை நாங்கள் தற்போது எழுப்பவில்லை. அதனை கைவிடவும் இல்லை" என்று கூறினார்.

0 கருத்துகள்: