கோவையில் நடந்த கொலை சம்பவம் : குற்றவாளிகளான இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு...
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு சிவகுமார் (55) என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலைய பகுதி சேர்ந்த அந்தோணி சகாயராஜ் மகன் பால்ராஜ் (32) மற்றும் ஏசுதாஸ் மகன் விஜயபாரதி (27) ஆகியோர்கள் மீது பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கின் விசாரணை கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கின் விசாரணை இன்று முடிவு பெற்று குற்றவாளிகளான பால்ராஜ் (32) மற்றும் விஜயபாரதி (27) ஆகியோருக்கு தலா ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய காவலர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டினார்.

0 கருத்துகள்: