வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

கோவையில் நடந்த கொலை வழக்கு : குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு !!!

SHARE

 கோவையில் நடந்த கொலை வழக்கு : குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு !!!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு மாரிதுரை (50) என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதி சேர்ந்த வரதராஜ் மகன் சக்திவேல் (23) என்பவர் மீது பெரியநாயக்கன் பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கின் விசாரணை கோவை ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

 இவ்வழக்கின் விசாரணை இன்று முடிவு பெற்று குற்றவாளியான சக்திவேல் என்பவருக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய காவலர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டினார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: