கடன் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்-வானதி
திமுக அரசு வாங்கிய கடன் மற்றும் செலவு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில், 2026-27-ம் ஆண்டில் தி.மு.க அரசு 1 லட்சத்து 78 ஆயிரத்து 308 கோடி ரூபாய் கடன் பெற திட்டமிட்டுள்ளது. இதனால் வரும் 2027 மார்ச் 31-ம் தேதியன்று தமிழகத்தின் கடன் சுமை 10 லட்சத்து 71 ஆயிரத்து 770 கோடி ரூபாயாக இருக்கும் என இடைக்கால பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் ஒரு கோடியே 84 லட்சம் ரூபாயை திமுக அரசு கடன் வாங்கியுள்ளது. வழக்கம் போல இந்த இடைக்கால பட்ஜெட்டில் வார்த்தை ஜாலங்கள், மக்களை ஏமாற்றம் தந்திரங்கள் தவிர வேறு எதுவும் இல்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.

0 கருத்துகள்: