மருதமலை சுப்பிரமணி சாமி கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூபாய் 1.3 கோடி வருமானம் !!!
கோவை அடுத்த மருதமலை சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் உண்டியல்களில் காணிக்கை செலுத்தி வழிபாடு செய்கின்றனர். மாதந்தோறும் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படுவது வழக்கம், அதன்படி நேற்று மருதமலையில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் என்னும் பணி நடைபெற்றது.இதில் 14 நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூபாய் 1 கோடியே 33 லட்சத்து 43 ஆயிரத்து 232 கிடைத்தது. காசோலை உண்டியல் மூலம் ரூபாய் 3 லட்சத்து 45 ஆயிரத்தி 877, திருப்பணி உண்டியல் மூலம் ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரத்து 597 வருமானமாக கிடைத்தது. இதன் மூலம் மொத்தம் ரூபாய் 1 கோடியே 38 லட்சத்து 29 ஆயிரத்து 706 வருமானமாக கிடைத்தது. இது தவிர தங்கம் 175 கிராம், வெள்ளி 5 கிலோ 527 கிராம், பித்தளை 39 கிலோ 400 கிராம் கிடைத்தது. மருதமலை கோவிலில் தக்கார் ஜெயக்குமார், துணை ஆணையர் விமலா, கோவில் உதவியாளர் உஷா நந்தினி, ஆய்வாளர் கோகிலவாணி ஆகியோர் முன்னிலையில் கோவில் கண்காணிப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் பக்தர்கள் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.


0 கருத்துகள்: