அ.தி.மு.க முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் - எடப்பாடி முதல் 23 பேர் களம் இறங்கும் தொகுதிகள் அறிவிப்பு !!!
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அ.தி.மு.க வின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
முதற்கட்டமாக வெளியான லிஸ்ட்டில் எடப்பாடி பழனிச்சாமி, கே.பி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜு உள்பட 23 பேரின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியுள்ளது:
அ.தி.மு.க ஆட்சி மன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி 23.04.2026 அன்று நடைபெற உள்ளது.
இந்த தமிழ்நாடு சட்டசபை பொதுத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அதிகாரப் பூர்வ வேட்பாளர்களாக கீழ்கண்டனர் கீழ்காணும் சட்டசபை தொகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
எடப்பாடி - எடப்பாடி பழனிச்சாமி, வேப்பனஹள்ளி - கே.பி முனுசாமி, திண்டுக்கல்லில் - திண்டுக்கல் சீனிவாசன், நந்தம் - நத்தம் விசுவநாதன், தொண்டாமுத்தூர் - எஸ்.பி.வேலுமணி, குமாரபாளையம் - தங்கமணி, ராயபுரம் - டி ஜெயக்குமார், மைலம் - சிவி சண்முகம், மதுரை மேற்கு - செல்லூர் ராஜு, பாலக்கோடு - கேபி அன்பழகன், நன்னிலம் - ஆர். காமராஜ், வேதாரண்யம் - ஓஎஸ் மணியன், விராலிமலை - டாக்டர் சி விஜயபாஸ்கர், கோவில்பட்டி - கடம்பூர் சி ராஜு, திருமங்கலம் - ஆர்பி உதயக்குமார், சிவகாசி - ராஜேந்திர பாலாஜி, மதுரவாயல் - பெஞ்சமின், கலசபாக்கம் - அக்ரி எஸ்எஸ் கிருஷ்ணமூர்த்தி, திருப்பரங்குன்றம் - ராஜன் செல்லப்பா, பவானி - கேசி கருப்பணன், ஜோலார்பேட்டை - கேசி வீரணி, கரூர் - எம்ஆர் விஜயபாஸ்கர், அரியலூர் - தாமரை எஸ் ராஜேந்திரன் என மொத்தம் 23 தொகுதிகளுக்கு அ.தி.மு.க வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.

0 கருத்துகள்: