கோவையில் மருத்துவரின் தாயாரை கொண்டு நகை - பணம் கொள்ளை அடித்த சம்பவம் : நேபாள தம்பதியைத் தேடி தனிப்படை மும்பைக்கு விரைந்தது !!!
கோவையில் மருத்துவரின் தாயாரை கொன்று விட்டு நகை - பணத்தை கொள்ளை அடித்த நேபாள தம்பதியை தேடி தனிப்படை போலீசார் மும்பை விரைந்தனர்.
கோவை, நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் ராம்குமார் குட்டி. இவருடைய தாயார் 82 வயதான கஸ்தூரி, இவரது வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு உதவியாக நேபாள நாட்டைச் சேர்ந்த சுர்ஜா என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தினர். அந்த வீட்டில் ஏராளமான நகை மற்றும் பணம் இருந்ததை பார்த்ததும் சுர்ஜாவுக்கு கொள்ளை அடிக்க ஆசை ஏற்பட்டது.
உடனே அவர் நேபாளத்தில் இருக்கும் தனது கணவர் ராஜூ மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கடந்த 6 ம் தேதி சுர்ஜாவின் கணவர் ராஜூ அவரது உறவினர்களான ராகேஷ் சவுத், திலீப் சாகி, தாமூர் புக்தா ஆகியோருடன் கோவை வந்து கஸ்தூரி கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த நகை - பணத்தை கொள்ளை அடித்துச் சென்றனர்.
இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி பெங்களூரில் வைத்து ராஜூவின் உறவினர்களான ராகேஷ் சவுத், திலீப் சாகி, தாமூர் புப்தா ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். தலைமறைவான நேபாள நாட்டு தம்பதி ராஜூ - சுர்ஜாவை வலை வீசி தேடி வந்தனர். இதற்கு இடையே அவர்கள் நேபாளத்துக்கு தப்பிச் சென்று விட்டதாக கூறப்பட்டது. அதன் பெயரின் நேபாளத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த தம்பதி அங்கு செல்லவில்லை என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும் போது :
கோவையில் மூதாட்டியை கொன்று நகை - பணத்துடன் தப்பிய தம்பதி காரில் பெங்களூரு சென்றனர். பின்னர் மும்பைக்கு தப்பி சென்று தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்து உள்ளது. எனவே தனிப்படையினர் மும்பை விரைந்து உள்ளனர். அவர்கள் மும்பை மற்றும் புனே பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமுறைவான தம்பதியின் மகள் மற்றும் உறவினர்கள் நேபாளத்தில் வசித்து வருகின்றனர். அவர்களின் செல்போனில் அந்த தம்பதி தொடர்பு கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே அவருடைய மகள் மற்றும் உறவினர்களின் செல்போன் எங்களுக்கு யார் ? தொடர்பு கொள்கிறார்கள் என்பதை கண்காணித்து வருவதாகவும், விரைவில் அந்த தம்பதியை பிடித்து விடுவோம் என்றும் அவர்கள் கூறினர்.

0 கருத்துகள்: