புதன், 25 மார்ச், 2026

எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் த.வெ.க வில் இணைவார்கள் - ஆதவ் அர்ஜுனா !!!

SHARE

 எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் த.வெ.க வில் இணைவார்கள் - ஆதவ் அர்ஜுனா !!!

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டது. 

இந்நிலையில் த.வெ.க ஆதவ் அர்ஜுனா, 2 நாட்களில் காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள் என்று குட்டையை குழப்பி உள்ளார்.

சென்னையில் நடைபெற்ற த.வெ.க கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா,

 "புதுச்சேரியில் தி.மு.க என்ன ஆளுங்கட்சியா. உங்களுக்கு அங்க எத்தனை எம்.எல்.ஏ க்கள் உள்ளனர். அங்கு காங்கிரஸ் தானே பெரியக் கட்சி. அவர்கள் தானே முதலமைச்சர் வேட்பாளர். கடைசி வரை வேட்பு மனுத் தாக்கல் கூட செய்யவில்லை. புதுச்சேரி நாராயணசாமிக்கு தி.மு.க வும், டெல்லி லாபியும் மட்டும் தான் தெரியும். கள அரசியல் அவருக்கு தெரியாது. கண்ணை திறந்தாலும், மூடினாலும் தி.மு.க மட்டும் தான் அவருக்கு தெரியும்.

2 தேர்தல்களில் காங்கிரஸ் அங்கு படுதோல்வி அடைய வைத்தார். 2026 தேர்தலில் நாராயணசாமிக்கு வாய்ப்பே வழங்கவில்லை. தி.மு.க அவரை ஏமாற்றி விட்டது. பா.ஜ.க வுடன் இணைந்து தி.மு.க சூழ்ச்சி செய்து அங்கு காங்கிரஸை ஒழித்தது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் சுயமாக வேட்பு மனு தாக்கல் செய்து விட்டனர். 

ஜெகத்ரட்சகன் மீது அமலாக்கத் துறை வழக்கு உள்ளது. அவரை பா.ஜ.க தான் அனுப்பியது. அதனால் இன்றைக்கு காங்கிரஸ் நடுத்தெருவில் நிற்கிறது.

அங்கு நாராயணசாமியை போல தமிழ்நாட்டில் ப.சிதம்பரம் உள்ளார். காங்கிரஸ் கட்சியின் ஒட்டு மொத்த பொதுச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களும் த.வெ.க வாசல் முன்பு நிற்கிறார்கள். தி.மு.க குதிரை மீது ஏறி கொண்டு மாற்றம் வரக் கூடாது என நினைத்தோம். ராகுல் காந்தியும் விஜய் மீது தான் அன்பு வைத்து உள்ளார். ஆனால் இங்கு உள்ள வயதானவர்கள் பெட்டி வாங்கிக் கொண்டு அடமானம் வைத்து விட்டனர் என்று காங்கிரஸ் கட்சியினர் புலம்புகிறார்கள்.

இன்னும் 2 நாட்களில் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான நிர்வாகிகள் த.வெ.க வில் ஐக்கியமாக போகிறார்கள். பிடிக்காத ஒரு பெண்ணை அழைத்து ரூமில் அடைத்து கட்டாய கல்யாணம் செய்தது போலத் தான் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு தி.மு.க மற்றும் டெல்லி இருவரையும் ஒரே நேரத்தில் எதிர்க்கின்ற தலைவர் விஜய் மட்டும் தான். இதே நிலை நீடித்தால் சிதம்பரமும் ஒழிந்து, காங்கிரஸ் கட்சியும் காணாமல் போய்விடும்.


நாங்கள் அனுபவசாலிகள், எங்களுக்கு பொருளாதாரம் தெரியும் என்று கதை, கதையாக விடுவார். ஆனால் காங்கிரஸை வளரவே விட மாட்டார். தி.மு.க தங்களின் கூட்டணி கட்சிகளுடன் எப்படி டீல் முடிக்கிறார்கள். பா.ஜ.க வில் இருந்து தி.மு.க வுக்கு வந்த தே.மு.தி.க வுக்கு 10 தொகுதிகள், 1 ராஜ்யசபா, அதுவே 8 வருடங்களாக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட்களுக்கு 5 தொகுதிகள் தான் வழங்கி உள்ளனர்" என்றார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: