புதன், 25 மார்ச், 2026

தி.மு.க கூட்டணியில் தொகுதி குறைப்பு : ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் ஆதங்கம் !!!

SHARE

 தி.மு.க கூட்டணியில் தொகுதி குறைப்பு : ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் ஆதங்கம் !!!

தி​.மு.க கூட்​ட​ணி​யில் ம.தி.மு.க​ வுக்கு வி.சி.க, கம்​யூனிஸ்ட் கட்​சிகளை விட குறை​வான தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளதற்கு, ‘நெஞ்சு பொறுக்​கு​தில்​லை​யே’ என ம.தி​.. மாவட்​டச் செய​லா​ளர் ஒரு​வர் முகநூலில் தனது ஆதங்​கத்தை வெளிப்​படுத்​தி​ உள்​ளார்.

தி.மு.க கூட்​ட​ணி​யில் வி.சி.க​ வுக்கு 8, இந்​திய கம்​யூனிஸ்ட் மற்​றும் மார்க்​சிஸ்ட் கட்​சிகளுக்கு தலா 5 தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​டு உள்ள நிலை​யில், ம.தி​.மு.க​வுக்கு 4 தொகு​தி​கள் மட்​டுமே ஒதுக்​கப்​பட்​டு உள்​ளது. அதி​லும், 3 தொகு​தி​களில் உதயசூரியன் சின்​னத்​தி​லும், ஒரு தொகு​தி​யில் சொந்த சின்​னத்​தி​லும் போட்​டி​யிட உள்​ளது. கடந்த முறையை விட 2 தொகு​தி​கள் 

குறைக்​கப்​பட்​டு உள்​ள​தால் அக்​கட்​சி​யினர் கடும் அதிர்ச்​சி​ அடைந்​தனர். இது தொடர்​பாக ம.தி​.மு.க திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செய​லா​ளர் மணவை தமிழ்​மாணிக்​கம் தனது முகநூல் பக்​கத்​தில், தி.மு.க கூட்​ட​ணி​யில் உள்ள கட்​சிகளுக்கு ஒதுக்​கப்பட்ட இடங்களை பட்​டியலிட்​டு, ‘நெஞ்சு பொறுக்​கு​தில்​லை​யே...’ எனக் குறிப்​பிட்டு தனது ஆதங்​கத்தை வெளிப்​படுத்​தி​ உள்​ளார்.

இதுகுறித்து அவர் கூறும்​போது, தொகு​திப் பங்​கீடு பட்​டியல் வரிசை​யில் ம.தி​.மு.க பின்​ தங்​கி இருப்​பதை பார்த்து ஏற்​பட்ட உணர்ச்சி குமுறல் பதிவு. இதற்​காக நாங்​கள் தேர்​தல் பணி​யில் பின்​ தங்க மாட்​டோம். கட்​சித் 

தலை​மை​யின் உத்​தர​வுக்கு கட்​டுப்​பட்​டு, தோழமைக் கட்​சி​களின் வெற்​றிக்கு  பாடு​படு​வோம்” என்​றார். அவரது முகநூல்பதிவுக்​கு, “இதற்கு தேர்​தல் புறக்​கணிப்பே மேல்; நம்மை அழிக்​கும் ஒரே இயக்​கம் தி.மு.க; பதவி ஆசை பிடித்த இரண்​டாம் கட்ட தலை​கள் மட்​டுமே இந்த நிலைக்கு காரணம்; கூட்​ட​ணியி​ல் இருந்து வெளி​யேற வேண்​டும்” என பலரும் கருத்து தெரி​வித்து வரு​கின்​றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: