திருமணத்திற்காக பழங்குடி சிறுமி விற்பனை - கணவர் உள்பட 3 பேர் கைது !!!
மகாராஷ்டிரத்தில் திருமணத்திற்காக பழங்குடியினத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி விற்பனை செய்யப்பட்டு உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வறுமை காரணமாக இடைத்தரகர் மூலம் சிறுமி விற்கப்பட்ட நிலையில், கணவர் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த போது இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்திற்கு உட்பட்ட பிவண்டி பகுதியில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 15 வயது பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுமி, திருமணத்திற்காக விற்கப்பட்டு உள்ளார்.
மராத்வாடா மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த பாவுசாஹேப் தாம்பே திருமணம் செய்து கொள்வதாகக் கூறி சிறுமியை விலைக்கு வாங்கி உள்ளார்.
பெற்றோரை இழந்து வறுமையில் தவித்து வந்த சிறுமியிடம் பேசிய இடைத்தரகர், திருமணத்துக்குப் பிறகு நல்ல வாழ்க்கை அமையும் என நம்பிக்கை அளித்து பணத்திற்கு விற்று உள்ளார்.
இந்நிலையில் 18 வயது அடையாத சிறுமிக்கு சட்டத்திற்கு புறம்பாக பிப்ரவரி 26 ஆம் தேதி திருமணம் நடைபெற்று உள்ளது. திருமணத்துக்குப் பிறகு சிறுமியை கிடங்கில் பூட்டி வைத்து கணவர் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.
இது தொடர்பான தகவல் அறிந்து சென்ற பிவாண்டி காவல் துறை அதிகாரி ஜிஜேந்திர தாக்குர், கணவர் உள்பட 3 பேரை போக்சோ, குழந்தை திருமண தடுப்புச் சட்டம் மற்றும் பழங்குடியின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தார்.

0 கருத்துகள்: