வியாழன், 26 மார்ச், 2026

புதுச்சேரி தேர்தல் ஏப்ரல் 3-ல் மோடி பங்கேற்கும் ரோடு ஷோ !!!

SHARE

 புதுச்சேரி தேர்தல் ஏப்ரல் 3-ல் மோடி பங்கேற்கும் ரோடு ஷோ !!!

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி ஏப்ரல் 3-ந் தேதி புதுச்சேரி வர உள்ளார். அங்கு நடக்கும் பிரமாண்ட ரோடு ஷோவில் அவர் பங்கேற்று பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். இதேபோல், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின், முன்னாள் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் அடுத்து அடுத்து தேர்தல் பிரசாரத்திற்காக புதுச்சேரி வர இருக்கின்றனர்.

 5 தொகுதிகளில் தி.மு.க-காங்கிரஸ் நேருக்கு நேர் போட்டி

புதுச்சேரியில், திருபுவனை, மங்கலம், நெல்லித்தோப்பு, ராஜ்பவன், காலாப்பட்டு ஆகிய 5 தொகுதிகளில் தி.மு.க - காங்கிரஸ் வேட்பாளர்கள் நேருக்குநேர் போட்டியிடுகின்றனர். புதுச்சேரி சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., - பா.ஜ.க, - அ.தி.மு.க., அடங்கிய தே.ஜ., கூட்டணியும், காங்கிரஸ், - தி.மு.க., - கம்யூனிஸ்ட்., - வி.சி.க., ஆகிய கட்சிகள் அடங்கிய 'இந்தியா' கூட்டணியும் களமிறங்கி உள்ளன. 

ஆனால், இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு, வேட்பு மனுத் தாக்கலுக்கான இறுதி நாள் வரை நீடித்து, மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ்., -16; தி.மு.க., 14 தொகுதிகளை பங்கீட்டு கொள்ளும் என அறிவிக்கப்பட்டது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: