மயிலாப்பூர் டூ நாகர்கோவில் வரை - தே.ஜ. கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க.வுக்கு எந்தெந்த தொகுதிகள்? இ.பி.எஸ் அறிவிப்பு !!!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் முழுப் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். ஏப்ரல் 23-ல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. அதேவேளை, தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இதுவரை பா.ஜ.க.வுக்கு 27, பா.ம.க.வுக்கு 18, அ.ம.மு.க.வுக்கு 11, த.மா.கா.வுக்கு 5, இந்திய ஜனநாயக கட்சிக்கு 2, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1, புரட்சி பாரதம் 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
கூட்டணிக்கு தலைமை தாங்கும் அ.தி.மு.க. எஞ்சிய 169 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று உள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது என்ற பட்டியலை அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார். அதன்படி,
பா.ஜ.க. வுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளின் விவரம்;
1.மயிலாப்பூர், 2.தளி, 3.மொடக்குறிச்சி, 4.ஊட்டி, 5.அவிநாசி, 6.திருப்பூர் தெற்கு, 7.கோவை வடக்கு, 8.கந்தர்வக்கோட்டை, 9.புதுக்கோட்டை, 10.திருப்பத்துார், 11.மதுரை தெற்கு, 12.சாத்துார், 13.திருச்செந்துார், 14.வாசுதேவநல்லுார், 15.ராதாபுரம், 16.நாகர்கோவில், 17.விளவங்கோடு, 18.ஆவடி, 19.திருவண்ணாமலை, 20.தஞ்சாவூர், 22.அறந்தாங்கி, 23.மானாமதுரை, 24.ராமநாதபுரம், 25.குளச்சல், 26.பத்மநாதபுரம், 27.ராசிபுரம்
பா.ம.க போட்டியிடும் தொகுதிகள் (18);
சேலம் மேற்கு, தர்மபுரி, பென்னகரம், விக்கிரவாண்டி, சோளிங்கர், மயிலாடுதுறை, திருப்போரூர், உத்திரமேரூர், ஜெயங்கொண்டம், போளூர், செஞ்சி, விருத்தாச்சலம், ரிஷிவந்தியம், காட்டுமன்னார்கோயில், கீழ்வேளூர், பெரம்பூர், சேலம் வடக்கு, அம்பத்தூர் உள்ளிட்ட 18 தொகுதிகளில் பா.ம.க களமிறங்குகிறது.
அ.ம.மு.க, த.மா.கா, த.ம.மு.க. தொகுதிகள் என்ன?
அ.தி.மு.க கூட்டணியில் அ.ம.மு.க (11 தொகுதிகள்) ஒதுக்கப்பட்டு உள்ள நிலையில், எந்தெந்த தொகுதிகள் என்ற விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, 1.பெரியகுளம், 2.மன்னார்குடி, 3.திருவையாறு, 4.காரைக்குடி, 5.திருப்பத்துார், 6.நான்குநேரி, 7.ஒட்டப்பிடாரம், 8.திருச்சி மேற்கு, 9.சைதாப்பேட்டை, 10.பூந்தமல்லி, 11.மடத்துக்குளம் ஆகிய 11 தொகுதிகளில் அ.ம.மு.க களமிறங்குகிறது.
ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய 5 தொகுதிகளில் தமிழ்மாநில காங்கிரஸ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜான் பாண்டியனின் த.ம.மு.க.கட்சி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடும். இதேபோல், கே.வி.குப்பம் தொகுதியில் புரட்சி பாரதம் போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்: