புதன், 11 மார்ச், 2026

கோவையில் பல்லி விழுந்த உணவு அருந்திய மாணவர்கள் 44 பேர் பாதிப்பு : தாமதமாக மருத்துவமனைக்கு அழைத்து வந்தது ஏன் ?மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த வேண்டும் - கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ வலியுறுத்தல் !!!

SHARE

கோவையில் பல்லி விழுந்த உணவு அருந்திய மாணவர்கள் 44 பேர் பாதிப்பு : தாமதமாக மருத்துவமனைக்கு அழைத்து வந்தது ஏன் ?மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த வேண்டும் - கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ வலியுறுத்தல் !!!


கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி பள்ளிகள் மதிய உணவில் பல்லி விழுந்ததால் 44 மாணவ மாணவியர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் நேற்றிரவு அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதை வேளையில் மதிய உணவு உட்கொண்ட மாணவ - மாணவியர் குறித்த தகவல் இரண்டரை மணிக்கு மேல் வெளியானதால் இடைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி ஆர்.ஜி.அருண்குமார் சந்தேகம் எழுப்பி உள்ளார்......


கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நேற்று மதிய உணவு உட்கொண்ட மாணவ - மாணவியர் 44 பேர் திடீரென வாந்தி மயக்கம் அடைந்தனர். மதிய உணவுக்காக வழங்கப்பட்ட சாம்பாரில் பல்லி இருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து உணவு உட்கொண்ட அனைவரும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் .தொடர்ந்து பிற்பகல் முதல் இரவு வரை குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இரவில் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

 முன்னதாக அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து சிகிச்சை பெற்ற பள்ளி குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோரை சந்தித்து நலம் விசாரித்த கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர் ஜி.அருண்குமார் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

 அனைத்து பள்ளி சமையல் அறைகளையும் தீவிரமாக அவ்வப் போது அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் இது போன்று மீண்டும் ஒரு சம்பவம் நடைபெறாமல் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

 மேலும் பல்லி விழுந்த சாம்பார் உடன்
மதிய உணவு உட்கொண்ட குழந்தைகள் இரண்டு மணிக்கு பிறகு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டதாகவும் அப்படி இருக்கையில் அந்த தாமதத்திற்கு காரணம் என்ன ? என கேள்வி அனுப்பியதுடன், எதனால் அந்த தாமதம் ஏற்பட்டது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், இதேபோல் மதிய உணவு சமைக்கும் அனைத்து ஊழியர்களுக்கும் முறையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.......
SHARE

Author: verified_user

0 கருத்துகள்: