கோவையில் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற பெண்ணிடம் சப்-இன்ஸ்பெக்டர் அத்துமீறியதாக புகார் - செல்போனில் பேசிய ஆடியோ வைரல் !!!
காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற பெண்ணிடம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அத்துமீறியதாக செல்போனில் பேசிய ஆடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.
கோவை அடுத்த சூலூர் காவல் நிலையத்துக்கு 30 வயது பெண் ஒருவர் தனது உறவினர் உயிரிழந்தது தொடர்பாக அங்கு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரிடம் புகார் அளித்தார்.
அது தொடர்பாக விசாரிக்க சிறப்பு இன்ஸ்பெக்டர் ரூபாய் 10,000 கேட்டதாக கூறப்படுகிறது. அந்த பணத்தையும் பெண் கொடுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திடீரென அந்தப் பெண்ணின் தோளில் கையை போட்டு அத்துமீறியதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அவரின் கையைத் தட்டி விட்டு கண்டித்து உள்ளார். அதன் பிறகு அங்கு இருந்து வெளியேறிய அந்தப் பெண் காவல் நிலையத்தில் தனக்கு நடந்த சம்பவம் குறித்து தனது உறவினரிடம் செல்போனில் கூறி கதறி அழுது உள்ளார். அவருக்கு உறவினர் ஆறுதல் கூறி உள்ளார்.
இந்நிலையில் காவல் நிலையத்தில் சிறப்பு இன்ஸ்பெக்டர் அத்துமீறியதாக அந்த பெண் பேசும் ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
எனவே பெண்ணிடம் அத்துமீறிய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கருத்து பதிவிட்டனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்ற பெண்ணிடம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அத்துமீறியது அதிர்ச்சி அளிக்கிறது சப் இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

0 கருத்துகள்: