புதன், 25 மார்ச், 2026

கோவையில் அதிர்ச்சி: கடை திறப்பு விழாவில் புகுந்து திருநங்கைகள் ரகளை - ₹50,000 கேட்டு மிரட்டல் !!!

SHARE

கோவையில் அதிர்ச்சி: கடை திறப்பு விழாவில் புகுந்து திருநங்கைகள் ரகளை - ₹50,000 கேட்டு மிரட்டல் !!!

சிறப்பு விருந்தினராக வந்த வருமான வரித்துறை அதிகாரி முன்னிலையிலேயே அத்துமீறல்; முகம் சுளிக்க வைத்த சம்பவத்தால் கடை உரிமையாளர்கள் வேதனை !!!

​ தொழில் நகரமான கோவையில் அண்மைக் காலமாகப் புதிய கடைகளின் திறப்பு விழாவைக் குறிவைத்து, திருநங்கைகள் குழுவாகச் சென்று மிரட்டிப் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது வணிகர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியில் 'ஷிங்க்' (Shink) என்ற கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் புதிய கடையின் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக வருமான வரித்துறை அதிகாரி பிரபாகரன் கலந்து கொண்டார்.

​விழா தொடங்கி ரிப்பன் வெட்டப்பட்ட அடுத்த நொடியே, அங்கு திரண்ட 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் அதிரடியாகக் கடைக்குள் நுழைந்தனர்.

 உரிமையாளரை ஒருமையில் அழைத்து, "நாங்கள் 10 பேர் வந்து உள்ளோம், ஆளுக்கு 5,000 வீதம் மொத்தம் 50,000 ரூபாய் தர வேண்டும். கொடுத்தால் தான் கடை நன்றாக ஓடும், இல்லையென்றால் சாபம் விடுவோம்" என மிரட்டத் தொடங்கினர்.

சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் இச்சம்பவம் நடந்ததால் செய்வதறியாது திகைத்த உரிமையாளர், தன்னிடம் இருந்த 501 ரூபாயை வழங்க முயன்றார். ஆனால், "நாங்கள் பிச்சை எடுக்க வரவில்லை, இந்த 501 ரூபாயை நீயே வைத்துக்கொள்" எனக் கூறி பணத்தைத் திருப்பி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். 

இறுதியில் வேறு வழியின்றி, நபர் ஒருவருக்கு 1,000 ரூபாய் வீதம் 10,000 ரூபாயை உரிமையாளர் வழங்கிய பின்னரே அவர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

மகிழ்ச்சியாக நடைபெற வேண்டிய திறப்பு விழா நிகழ்ச்சி, இச்சம்பவத்தால் சோகத்தில் முடிந்தது. 

​"புதிதாகக் கடை திறப்பவர்களைக் குறி வைத்துத் திருநங்கைகள் குழுவாகச் செயல்படுகின்றனர்."

​"முக்கியப் பிரமுகர்கள் இருக்கும் போதே அநாகரிகமாக நடந்து கொள்வதால், கடையின் நற்பெயர் கெடுகிறது."

​"சமூகத்தில் திருநங்கைகளுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் அதே வேளையில், இத்தகைய மிரட்டல் போக்கை அனுமதிக்க முடியாது."

காவல்துறை நடவடிக்கை எடுக்குமா ?

கோவை மாநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த "வசூல் வேட்டை" குறித்துக் காவல் துறையினர் தீவிர ரோந்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அத்துமீறிப் பணம் பறிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: