தமிழ்நாட்டிற்கான ரயில்வே நிதி ஒதுக்கீடு : பா.ஜ.க ஆட்சியில் 9 மடங்கு உயர்வு - பிரதமர் மோடி !!!
பா.ஜ.க ஆட்சியில் ரயில்வே துறைக்கு தமிழ்நாட்டிற்கான நிதி ஒதுக்கீடு 9 மடங்கு அதிகரித்து உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். 1,300 கிமீ தூரத்திற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக கூறிய பிரதமர் மோடி, 10 ஆண்டுகளில் ரயில்வே துறை பல்வேறு சாதனைகள் படைத்து உள்ளது என்றும் தெரிவித்து உள்ளார்.
மதுரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக மதுரை வந்து உள்ள பிரதமர் மோடி, மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் ரூ.4,400 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார்.
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையேயான 4 வழித் தடம், காரைக்குடி உள்ளிட்ட 8 மறுசீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்கள், கும்பகோணம், வேலூர், ஏற்பாடு உள்ளிட்ட இடங்களில் ஆகாஷ்வாணி பண்பலை உள்ளிட்ட திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதேபோல் மரக்காணம் - புதுச்சேரி பிரிவு, பரமக்குடி - ராமநாதபுரம் பிரிவு 4 வழிச்சாலை பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
இதன் மூலமாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி செல்வது எளிதாகும். ரூ.2,157 கோடியில் மரக்காணம் - புதுச்சேரி இடையில் 4 வழிச்சாலை பணிக்கு அடிக்கல் நாட்டி உள்ளேன். கடந்த 15 ஆண்டுகளில் ரயில்வே துறை பெரும் வளர்ச்சி அடைந்து உள்ளது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின் தமிழ்நாட்டுக்கான ரயில்வே திட்டங்களுக்கான நிதி 9 மடங்கு அதிகரித்து உள்ளது. கடந்த ஆண்டு பாம்பன் பாலத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு கிடைத்தது.

0 கருத்துகள்: