செவ்வாய், 10 மார்ச், 2026

விஜய்யை என்.டி.ஏ கூட்டணிக்கு அழைத்த பா.ஜ.க நிர்வாகியின் பதவி பறிப்பு - நயினார் நாகேந்திரன் அதிரடி !!!

SHARE

 விஜய்யை என்.டி.ஏ கூட்டணிக்கு அழைத்த பா.ஜ.க நிர்வாகியின் பதவி பறிப்பு - நயினார் நாகேந்திரன் அதிரடி !!!

தமிழக பா.ஜ.க மாநில செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து ஏ.என்.எஸ் பிரசாத் நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். த.வெ.க தலைவர் விஜய்க்கு கூட்டணி அழைப்பு விடுத்து இருந்த நிலையில் அவர் கட்சி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார். இந்த அறிவிப்பினை தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டு உள்ளார்.

தமிழக பா.ஜ.க மாநில செய்தித் தொடர்பாளராக இருந்து வந்தவர் ஏன்.என்.எஸ் பிரசாத். இவர் தேர்தல் மாநில பணிக் குழுவில் ஊடக்கத்துறை பொறுப்பாளர் பொறுப்பிலும் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர் இப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார்.

த.வெ.க தலைவர் விஜய்க்கு ஏன்.என்.எஸ் பிரசாத் கூட்டணி அழைப்பு விடுத்து இருந்த நிலையில் இந்த பதவி பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: