திரிஷாவுடன் திருமண நிகழ்ச்சிக்கு விஜய் போயிருக்கக் கூடாது - த.வெ.க நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் கண்டனம் !!!
சங்கீதாவை விவாகரத்து செய்யாமல் நடிகை திரிஷாவுடன் த.வெ.க தலைவர் விஜய், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கக் கூடாது என த.வெ.க பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் கண்டனம் தெரிவித்து உள்ளார்.இதுகுறித்து அவர் தனது செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும் போது:
விவாகரத்து விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் பெண்கள் எப்படிப்பட்ட பெண்கள் என எனக்கு தெரியவில்லை. இதை கலாச்சார சீர்கேடாக நான் நினைக்கிறேன்.
விவாகரத்துகள் எல்லா குடும்பங்களிலும் தான் நடக்கின்றன. விவாகரத்து செய்து விட்டு மற்றொரு மணவாழ்க்கையை நிறைய பேர் தேடி கொள்கிறார்கள். இதை தவறு என சொல்லவில்லை. விவாகரத்து என்றால் தவறானது என யாரும் சொல்லும் அளவுக்கு இல்லை.
தம்பதியினர் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பின் , விவாகரத்து சிறந்த தீர்வாக இருக்கும். விவாகரத்துக்கு பிறகு பெண்ணுக்கோ ஆணுக்கோ இன்னொரு திருமணம் செய்து கொள்ள விருப்பம் ஏற்பட்டால் அதற்கு அவர்களுக்கு முழு உரிமை உள்ளது.
அதுபோல் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், விவாகரத்து செய்தாலும் தவறில்லை, விவாகரத்துக்கு பிறகு வேறு திருமணம் செய்து கொண்டாலும் யாரும் கேள்வி கேட்க போவதில்லை.
விஜய்யின் மனைவி விவாகரத்து வேண்டும் என்று மட்டும் கேட்கவில்லை. வீட்டில் வாழ இடம் வேண்டும் என கேட்கிறார்கள். அதற்கு வொர்த்தே இல்ல என கூறுவதா? அவரது பிள்ளைகளும் வெளியே ஹாஸ்டலில், தனியே வீடு எடுத்து தங்கி இருக்கிறார்கள். இது சரியான குடும்ப வாழ்க்கை அமைப்பு இல்லை.
எல்லா வீட்டிலும் ஆயிரம் பிரச்சினை இருக்கும். இதை ஏன் நாம் கேட்கணும் என்று தான் நானும் இருந்தேன். ஆனால் இவ்வளவு பிரச்சினை போய் கொண்டு இருக்கும் போது பொதுவெளியில் திரிஷாவுடன் திருமணம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகும்.
போன வாரம் கூட திரிஷா வீட்டில் இருந்து விஜய் வெளியே வர வேண்டும் என தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதற்கு நானும் கண்டனம் தெரிவித்து இருந்தேன். விஜய்யின் மனைவி தனது விவாகரத்து வழக்கில், விஜய் ஒரு நடிகையுடன் உறவில் இருக்கிறார், தேவைப்பட்டால் மட்டுமே அந்த நடிகையின் பெயரை சொல்வேன் என மிகவும் கண்ணியமாக ஒரு மனுவை தாக்கல் செய்து உள்ளார்.
இப்படி இருக்கையில், மகளிர் தினத்தில் மேடை ஏறி பெண்ணியம் பேசி கண்ணியம் இல்லாமல் திரிஷாவுடன் திருமணத்திற்கு செல்கிறார் என்ற இந்த சமூகம் அவரை எப்படி பார்க்கும். முதல்வராகும் கனவில் இருக்கும் விஜய் , ஒரு நடிகையுடன் வந்தால் எப்படி மக்கள் பார்ப்பார்கள்?
இவர் முதல்வராக த.வெ.க வினர் பலரும் உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். வீட்டுக்குள் இருக்கும் இவருக்கு எதுவும் தெரியாது. பெண்கள் எல்லாம் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறோம். அந்த உழைப்புக்கு விஜய் மரியாதை கொடுப்பதில்லை.
அவரது ஒவ்வொரு பிரச்சினையிலும் நிறைய தவறு இருக்கிறது. அதில் எல்லாம் முட்டுக் கொடுக்கிறோம். கரூர் விவகாரம், ஜனநாயகன் படம் ரிலீஸ் உள்ளிட்ட விவகாரங்களில் கட்சியினர் விஜய்க்கு எத்தனையோ சப்போர்ட் செய்கிறார்கள்.
மாற்றத்தை கொடுப்பார் என நினைத்த போது விஜய், இப்படி ஒரு மாற்றத்தை கொடுப்பார் என நினைத்த போது அது ஷாக்கிங்காக இருந்தது. பா.ஜ.க தலைவர்களுடனான புகைப்படங்கள் வைத்து இருப்பதால் நான் பா.ஜ.க வின் ஸ்லீப்பர் செல் என யாராவது நினைத்தால் நினைத்துக் கொள்ளட்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

0 கருத்துகள்: