செவ்வாய், 10 மார்ச், 2026

தி.மு.க மாநாட்டுக்குச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து! 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் !!!

SHARE

 தி.மு.க மாநாட்டுக்குச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து! 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் !!!

தி.மு.க மாநாட்டுக்கு தொண்டர்கள் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

திருச்சியில் தி.மு.க வின் மாநில மாநாடு இன்று மாலை நடைபெறுகிறது. அதனை ஒட்டி தமிழகம் முழுவதும் இருக்கும் திமுக தொண்டர்கள் திருச்சி சென்று கொண்டு இருக்கின்றனர்.

இதே போல், நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தாலுகாவில் இருந்து 20 க்கும் மேற்பட்ட தி.மு.க தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்க வேனில் சென்று உள்ளனர்.

திருச்சி நோக்கி சென்று கொண்டு இருந்த போது, தஞ்சாவூர் விளார் புறவழிச் சாலை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, நிலை தடுமாறி அருகில் உள்ள பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் வேனில் இருந்த இருபதுக்கும் மேற்பட்ட தி.மு.க தொண்டர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக, அருகில் இருந்தவர்கள் வேனில் இருந்தவர்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தஞ்சாவூர் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: