ஞாயிறு, 29 மார்ச், 2026

தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் - புதுமுகங்கள் ...

SHARE

 தி.மு.க வேட்பாளர்கள் பட்டியல் - புதுமுகங்கள் ...


தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலில் சென்னையில் தி.மு.க எம்.எல்.ஏ க்களாக உள்ள ஐந்து பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (மார்ச் 28) செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான 164 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளார். இந்த பட்டியலில் அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜ், மனோ தங்கராஜ், காந்தி ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.

27 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளில் நேரடியாக தி.மு.க வுடன் பா.ஜ.க மோதுகிறது. நான்கு தொகுதிகளில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது. தி.மு.க வை பொறுத்தவரை 175 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. 121 தொகுதிகளில் நேரடியாக அ.தி.மு.க வுடன் மோதுகிறது.

தி.மு.க வேட்பாளர் பட்டியலில் இளைஞர்கள், பெண்கள், பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது. இதில் 60-க்கும் மேற்பட்ட புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. வேட்பாளர்கள் பட்டியலில் பெண் 18 பேரும் அடங்குவர். 125 பேர் பட்டதாரிகள் ஆவர். இதில் 15 பேர் மருத்துவர்கள், 17 பொறியாளர்கள், 29 பேர் வழக்கறிஞர்கள், 7 பேர் முனைவர் பட்டம் பெற்றவர்கள் ஆவர்.

கன்னியாகுமாரி-மகேஷ்,

திருநெல்வேலி- சுப்பிரமணியன்,

தென்காசி- கலை கதிரவன்,

கோவில்பட்டி- கருணாநிதி,

ஒட்டப்பிடாரம்- ராமஜெயம்,

பரமக்குடி- கதிரவன்,

சாத்தூர்- கடற்கரை ராஜ்,

ராணிப்பேட்டையில்- ஆர்.காந்தியின் மகன் வினோத் காந்தி,

திருப்பரங்குன்றம்- கிருத்திகா தங்கபாண்டி,

மதுரை மேற்கு- ரகு பாலாஜி, சோழவந்தான்- வெங்கடேசன்,

வேதாரண்யம்- புகழேந்தி,

புவனகிரி- துரை சரவணன்,

அரியலூர்- லதா பாலு,

பெரம்பலூர் தனி- ஜெயலட்சுமி,

முசிறி- கருணை ராஜா,

லால்குடி- பாரி வள்ளல்,

குளித்தலை- சூரியனூர் சந்திரன்,

கிருஷ்ணராயபுரம் (தனி)- கே ராஜா,

கரூர்- தியாகராஜன், அரவக்குறிச்சி- மொஞ்சனூர் இளங்கோ,

திண்டுக்கல்- செந்தில்குமார்,

நிலக்கோட்டை (தனி)- நாகஜோதி,

மடத்துக்குளம்- ஜெயராமகிருஷ்ணன்,

உடுமலைப்பேட்டை- ஜெயக்குமார்,

வால்பாறை- சுதாகர்,

கிணத்துக்கடவு- சபரி கார்த்திகேயன்,

தொண்டாமுத்தூர்- கார்த்திகேயன்,

கோயம்புத்தூர் வடக்கு- செந்தமிழ் செல்வன்,

சூலூர்- தளபதி முருகேசன், திருப்பூர் தெற்கு- தினேஷ்குமார்,

அவிநாசி- கோகிலா மணி,

மேட்டுப்பாளையம்- கவிதா கல்யாணசுந்தரம்,

குன்னூர்- ராஜு,

தாராபுரம்- இந்திராணி,

குமாரபாளையம்-பாலு,

பரமத்திவேலூர்- மூர்த்தி,

சேந்தமங்கலம்- பூமலர்,

வீரபாண்டி- தருண்,

எடப்பாடி- காசி, சேலம் தெற்கு-லோகநாதன்,

மேட்டூர்- மிதுன் சக்கரவர்த்தி,

ஆரணி- மகாலட்சுமி கோவர்தனன்,

ஓசூர்- சத்யா,

கே.வி.குப்பம்- ராஜேஸ்வரி மோகன்காந்தி,

காஞ்சிபுரம்- நித்யா சுகுமார்,

தாம்பரம்- கிருத்திகா தேவி, தி.நகர்- ராஜா அன்பழகன், அண்ணா நகர்- சிற்றரசு, ராயபுரம்- சுபேர்கான், எழும்பூர்- தமிழன் பிரசன்னா,

வில்லிவாக்கம்-கார்த்திக் மோகன், அம்பத்தூர்- பூர்ணிமா, வானூர்- திராவிடமணி,

கெங்கவல்லி- சின்னத்துரை, உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

அண்ணா நகர்- சிற்றரசு,

வில்லிவாக்கம்- கார்த்திக் மோகன்,

தி.நகர்- ராஜா அன்பழகன்,

ராயபுரம்- சுபேர்கான்,

எழும்பூர்- தமிழன் பிரசன்னா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

எனினும் தற்போது சென்னையில் எம்.எல்.ஏ க்களாக உள்ள ஐந்து பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: