செவ்வாய், 31 மார்ச், 2026

கூட்டணி கட்சியினர் வெற்றி பெறாவிட்டால் உங்கள் பதவி இருக்காது - மாவட்ட செயலாளர்களை எச்சரித்த ஸ்டாலின் !!!

SHARE

 கூட்டணி கட்சியினர் வெற்றி பெறாவிட்டால் உங்கள் பதவி இருக்காது - மாவட்ட செயலாளர்களை எச்சரித்த ஸ்டாலின் !!!

கூட்டணிக் கட்சியினர் வெற்றி பெற வைக்காவிட்டால் உங்களின் பதவி இருக்காது என மாவட்டச் செயலாளர்களை எச்சரித்து உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் 23 ம் தேதி நடைபெற உள்ள சூழலில், அனைத்து முக்கிய கட்சிகளும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு, தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கி உள்ளது.

அந்த வகையில், 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தல் அறிக்கையையும் தி.மு.க வெளியிட்டு உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.

இதன் இடையே, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 அப்போது, கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு தேநீர் விருந்தும் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரச்சாரத்தை எவ்வாறு மேற்கொள்வது ? பொதுமக்களிடம் அரசின் திட்டங்களை எந்த வகையில் கொண்டு சேர்ப்பது ? உள்ளிட்டவை குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தேர்தல் பிரச்சார வியூகம் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்,

 “வரும் தேர்தலில் நாம் அமைத்து இருக்கும் கூட்டணி புதிதாக அமைந்து உள்ள கூட்டணி அல்ல. தொடர்ந்து, இரண்டு நாடாளுமன்றம், சட்டமன்றம் இடையிலே உள்ளாட்சி இடைத்தேர்தல் ஆகிய தேர்தல்களில் மாபெரும் கூட்டணி அமைத்து, இந்திய அளவில் இல்லாத வகையில் தொடர்ந்து இந்த மதச்சார்பற்ற கூட்டணி அமைந்து உள்ளது. தற்போது இன்னும் சில கட்சிகள் கூட்டணியில் இணைந்து உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு எனது அழைப்பை ஏற்று வருகை புரிந்தவர்களுக்கு நன்றி” என்றார்

மேலும், கூட்டணிக் கட்சியினர் வெற்றி பெறாவிட்டால் உங்கள் பதவி இருக்காது என மாவட்டச் செயலாளர்களை எச்சரித்து உள்ளேன் என்று முதலமைச்சரின் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எங்கேனும் சுணக்கம் இருந்தால் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டு உள்ள வார் ரூமுக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை இருக்கும் என்றும் முதல்வர் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது.

நாங்கள் எண்ணிக்கையால் அமைந்த கூட்டணி அல்ல; மதச்சார்பின்மை போற்றி - மாநில உரிமை காக்கும் எண்ணத்தால் இணைந்த கூட்டணி !

தமிழ்நாடு இதுவரை காணாத மாபெரும் வெற்றி பெறப் போகும் நம் “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி” கட்சித் தலைவர்கள் சொல்கிறோம்…

இதில், கூட்டணிக் கட்சித் தலைவர்களான செல்வப்பெருந்தகை, வைகோ, கமல்ஹாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: