கோவை அதிர்ச்சி : அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தி.மு.க பிரமுகர் குடும்பத்துடன் குடியேற்றம் - அப்பகுதியினர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் !!!
இந்நிலையில், கோவையில் மக்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட ஒரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தையே தனது சொந்த வீடாக மாற்றி, தி.மு.க பிரமுகர் ஒருவர் குடும்பத்துடன் 'செட்டில்' ஆகியிருக்கும் பகீர் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வடவள்ளி 36-வது வார்டு பகுதியில் அமைந்து உள்ள இந்த அரசு கட்டிடத்தை, வடவள்ளி பகுதி தி.மு.க பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அங்கே குடும்பத்துடன் வசித்து வருகிறார். மருத்துவ உபகரணங்கள் இருக்க வேண்டிய இடத்தில் சமையல் பாத்திரங்களும், நோயாளிகள் இருக்க வேண்டிய இடத்தில் படுக்கைகளும் இருப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் கொதிப்பு அடைந்து போயு உள்ளனர்.
இந்த அத்துமீறல் குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் தட்டிக் கேட்டபோது,
அந்த தி.மு.க பிரமுகரோ சற்றும் சளைக்காமல் "நான் மருத்துவரிடம் முறையான அனுமதி வாங்கித் தான் இங்கு குடியிருக்கிறேன்" என எகத்தாளமாக பதிலளித்து உள்ளார்.
அரசு சொத்தை தனி நபர் பயன்பாட்டிற்கு வழங்க மருத்துவருக்கு அதிகாரம் ஏது என்ற கேள்வியுடன், அங்கு இருந்தவர்கள் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.
தமிழகம் முழுவதும் சுமார் 2,266-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் (PHC) மக்கள் நலப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில், ஆளுங்கட்சி பலத்தை பயன்படுத்தி மருத்துவமனையையே வீடாக மாற்றிய சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இந்த விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்குமா ? என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


0 கருத்துகள்: