வியாழன், 5 மார்ச், 2026

வாகனத் தவணைக்கு பணம் கொடுக்காததால் இன்ஜினியரிங் மாணவரை குத்திக் கொன்ற இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு !!!

SHARE

வாகனத் தவணைக்கு பணம் கொடுக்காததால் இன்ஜினியரிங் மாணவரை குத்திக் கொன்ற இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு !!!

வாகனத்தவனுக்கு பணம் கொடுக்காததால் என்ஜினியரிங் மாணவறை குத்திக் கொண்ட இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.

கொடைக்கானலில் இருக்கு உள்ள போலத்துரை சேர்ந்தவர் பார்த்திபன் இவர் தனது தாய் மற்றும் சகோதரர்களுடன் கோவை துடியலூர் அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் வசித்து வந்தார் பார்த்திபன் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்துக்கொண்டு தனியார் கல்லூரியில் பகுதிநேர இன்ஜினியரிங் படித்து வந்தார்.

கொடைக்கானலில் சிறு வயதில் நண்பர்களாக இருந்த அஜித் குமார் பிரவீன் குமார் ஆகியோர் கோவையில் வேலை பார்த்து வந்தனர் நண்பர்களுடன் பார்த்திபன் தொடர்ந்து பழகி வந்தார் பண உதவி செய்து வந்துள்ளார்.

கடந்த 15.2.2018 அன்று அஜித்குமார் பார்த்திபனை செல்போனில் தொடர்பு கொண்டு மோட்டார் சைக்கிளுக்கான மாதாந்திர தவணைத் தொகை செலுத்த வேண்டும் குறிப்பிட்ட இடத்துக்கு வருமாறு அழைத்துள்ளார் அங்கு மற்றொரு நண்பர் பிரவீன் குமார் இருந்துள்ளார் அஜித்குமார் வாகன கடன் செலுத்த பணத்தை கேட்டுள்ளார் அப்பொழுது தன்னிடம் பணம் இல்லை என்று பார்த்திபன் கூறியதாக தெரிகிறது இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பார்த்திபனை கத்தியால் குத்தி கொலை செய்தனர் இது தொடர்பாக துடியலூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர் மேலும் தாழ்த்தப்பட்டோருக்கான வன்கொடுமை சட்டப்பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு விசாரணை கோவை தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன் குற்றம் சாட்டப்பட்ட அஜித்குமார் பிரவீன் குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார் இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் ஆஜராகி வாதாடினார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: