திங்கள், 2 மார்ச், 2026

காமேனி கொல்லப்பட்டதால் ஈரானின் அடுத்த தலைவர் யார் ?

SHARE

 காமேனி கொல்லப்பட்டதால் ஈரானின் அடுத்த தலைவர் யார் ?

ஈ​ரானில் உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதால், அடுத்த தலை​வர் யார் ?என்ற கேள்வி எழுந்து உள்ளது.

அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதலில் ஈரானின் அதி​கபட்ச அதி​காரம் வைத்​து இருந்த மதத் தலை​வ​ர் காமேனி கொல்லப்பட்டார். இதனால் அடுத்த தலைவர் யார் ? என்று கேள்வி எழுந்து உள்ளது. தனக்​குப் பின்​னர் இவர்​தான் வாரிசு என்று காமேனி பகிரங்​க​மாக யாரை​யும் அறிவிக்கவில்லை.

ஆனால், அவருடைய 2-வது மகன் மோஜ்தபா காமேனி​ தான் அடுத்த தலை​வ​ராக வரு​வார் என்று கூறப்​படு​கிறது. 56 வயதாகும் மோஜ்தபா தனது தந்தை காமேனியிடம் அரசி​யல் கற்​றவர் என்று கூறப்படுகிறது.

எனினும் எதிர் தரப்​பைச் சேர்ந்த 2 பேர் ஈரானில் ஆட்​சி​யைப் பிடிக்க முயற்சித்து வருகின்றனர். முக்​கிய எதிர்க்​கட்​சித் தலை​வர் மர்​யம் ரஜாவி மற்​றும் அமெரிக்​கா​வில் தஞ்​சம் அடைந்​து உள்ள ஈரானின் பட்​டத்து இளவரசர் ரெசா பஹ்லவி ஆகியோர் அதிகாரத்​தைக் கைப்பற்ற நினைக்கின்றனர்.

அமெரிக்க தாக்​குதலில் காமேனி கொல்​லப்​பட்ட பிறகு, இவர்​கள் இருவரும் விடுத்த செய்தி​யில், “ஈரான் மக்கள் ஒற்​றுமை​யாக இருக்க வேண்​டும்” என்று கூறி​ உள்​ளனர். அத்​துடன் ஈரானில் இஸ்லாமிய குடியரசுக்கான எதிர்​கால திட்​டங்​கள் குறித்து இரு​வரும் விளக்​க​மாக எடுத்துரைத்​து உள்​ளனர். மர்யம் ரஜாவி வெளியிட்ட செய்​தி​யில், 

“ஈரானிய மக்​களே... மதகுரு ஆட்​சி​யைத் தூக்கி எறி​யுங்​கள். ஜனநாயகக் குடியரசு ஆட்​சியை ஏற்​படுத்துங்கள்” என்று அழைப்பு விடுத்​து உள்ளார்.

இதற்​கு இடை​யில், ஈரான் கடைசி மன்​னரின் மகன் ரெசா பஹ்ல​வி, தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “இஸ்​லாமிய ஆட்சி சிதைந்​தால், அதற்கு மாற்​றான ஜனநாயக ஆட்சி மாற்​றத்​துக்கு என்னிடம் திட்​டங்​கள் உள்ளன.

அமெரிக்​கா​வின் நடவடிக்கை ஈரான் மக்களுக்கு எதி​ரானது அல்ல. அது மனி​தாபிமான தலை​​யீடு” என்று கூறி​ உள்​ளார். இவர்​கள் தவிர ஈரானில் இஸ்​லாமிய புரட்​சிக்கு வழி​வகுத்த ருஹோல்லா கொமேனி​யின் பேரன் ஹசன் கொமேனி​யும் (53) ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற நினைக்கிறார்.


ஆனால், காமேனி கொல்லப்​பட்ட பிறகு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சோசி​யல் வலை​தளத்​தில் வெளியிட்ட பதி​வில், “நல்ல தலை​வர் ஒரு​வர் ஈரானை வழி நடத்​து​வார். அவர் யார் ? என்​பது எனக்கு நன்கு தெரி​யும், ஆனால், அதை உங்களுக்கு சொல்ல மாட்​டேன்” என்று கூறி​ உள்​ளார். ஆனால், யார் ?என்​பது குறித்து அவர் எது​வும் கூற​வில்​லை.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: