கோவையில் கல்லூரியில் நடந்த ஆட்டோ ஷோவில் விபரீதம் : நூலிழையில் உயிர் தப்பிய மாணவிகள் - அதிர்ச்சியை ஏற்படுத்தும் செல்போன் வீடியோ வீடியோ காட்சிகள் ....
கோவை, துடியலூர் - சரவணம்பட்டி சாலையில் உள்ள எஸ் என் எஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஆட்டோ ஷோ நிகழ்ச்சியில் மாற்றங்கள் செய்த கார் மற்றும் ஜீப்களை மாணவர்கள் கல்லூரிக்குள் வேகமாக ஓட்டி சாகசங்களில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது மாணவர் ஒருவர் ஓட்டிவந்த தார் ஜீப் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 10 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது. இதில் அதிர்ஷ்ட வசமாக அருகில் நின்று இருந்த 2 மாணவிகள் நூலிலையில் உயிர் தப்பினர். விபத்து நடந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை துடியலூர் சரவணம்பட்டி சாலையில் செயல்படும் எஸ் என் எஸ் ராஜல்ட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று துறை சார்ந்த ஆட்டோ ஷோ விழா ஒன்று நடைபெற்றது..
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மாணவர்கள் மாற்றங்கள் செய்திருந்த தங்களது ஜீப் மற்றும் கார்களை கல்லூரி வளாகத்திற்குள், மாணவர்கள் அதிகம் இருந்த பகுதியில், ரேஸ் ஓட்டுவது போல் வேகமாக ஒட்டிச் சென்றனர். அப்போது மாணவர் ஒருவர் ஓட்டிவந்த தார் ஜீப் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மீது வேகமாக மோதி அருகில் இருந்த மரத்தில் மோதி நின்றது. இதில் பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பலத்த சேதமடைந்தன..
இந்த நிலையில் அங்கு நின்று கொண்டிருந்த 2 மாணவிகள் அதிர்ஷ்ட வசமாக மயிர் இழையில் உயிர் தப்பினர். இது குறித்த வீடியோ காட்சிகள் தற்பொழுது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
மாணவர்கள் போதையில் இருந்தனரா, இப்படி கல்லூரி வளாகத்திற்குள் வேகமாக ஓட்டி வரும் வரை அங்கிருந்து செக்யூரிட்டி ஆட்கள் தடுக்கவில்லையா போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. கல்லூரி வளாகம் இது குறித்து கருத்து எதும் தெரிவிக்க மறுத்துவிட்டது..

0 கருத்துகள்: