மாவோயிஸ்டுகள் கோவை நீதிமன்றத்தில் ஆஜர் !!!
கோவை, கருமத்தம்பட்டியில் கடந்த 2015 ஆம் ஆண்டு பதுங்கி இருந்த கேரளாவைச் சேர்ந்த மாவோயிஸ்டுகள் ரூபேஷ், ஷைனிக், அனூப், கண்ணன், வீரமணி ஐந்து வேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கேரளாவில் பல்வேறு இடங்களில் வழக்குகள் உள்ளன. ரூபேஷ் கேரளாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். மற்ற நான்கு பேர் ஜாமினில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். மாவோயிஸ்டுகள் மீதான வழக்கு விசாரணை கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணை நீதிபதி விஜயா முன்னிலையில் நடந்தது. ரூபேஷ் உட்பட ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணையை தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ரூபிஷ் கேரளாவிற்கு பலத்த காவல் துறை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டார்.

0 கருத்துகள்: