சனி, 14 மார்ச், 2026

ரீல்ஸ் போடும் முதல்வர்... முடங்கிப்போன தமிழகம்" : கரூர் விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டும் - அண்ணாமலை பேட்டி !!!

SHARE

 

ரீல்ஸ் போடும் முதல்வர்... முடங்கிப்போன தமிழகம்" : கரூர் விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டும் - அண்ணாமலை பேட்டி !!!

தி.மு.க கூட்டணியில் சீட் குறைப்பு - 'வைகோவின் குரல் இறங்கி இருக்கிறது ....

கரூர் விவகாரத்திற்கு செந்தில்பாலாஜியை கண்டிப்பாக சி.பி.ஐ விசாரணைக்கு அழைக்க வேண்டும் - ஜனநாயகன் படம் பற்றி விஜயே பேச வில்லை, முதலில் அவர் பேசினால் அப்புறம் பேசுகின்றேன் எனவும் இதில் பா.ஜ.க வை யாருமே குற்றம் சுமத்த வில்லை என அண்ணாமலை பேட்டி"

கோவை காளப்பட்டி இல்லத்தில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விளாத்திகுளத்தில் 17 வயது சிறுமிக்கு நடத்த கொடூரத்திற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை என தெரிவித்தார். சிறுமி காணாமல் போன நிலையில் , புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனவும், 

புகார் போன போதே நடவடிக்கை எடுத்து இருந்தால் அசம்பாவிதம் தடுக்கபட்டு இருக்கலாம் எனவும் இது காவல் துறையின் தோல்வி, முதல்வரின் தோல்வி என தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கு முதல்வர் பொறுப்பு, ஆட்சியாளராக தோற்று இருப்பதை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். பெட்ரோல், கேஸ் விவகாரத்தில் இங்கே இருக்கும் அரசியல்வாதிகள் பீதியை கிளப்புவதால் பொது மக்கள் கேன்களுடன் போய் பெட்ரோல் வாங்கும் நிலை இருக்கிறது என குறிப்பிட்டார். எந்த பிரச்சினையும் இல்லை என மத்திய அரசு சொல்லி இருக்கிறது எனவும், ஹார்மூஸ் பகுதியை கடந்து இரு கப்பல்கள் வந்து இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் பெட்ரோல் விலை உயர்ந்து இருக்கின்றது, ஆனால் இந்தியாவில் எந்த பிரச்சினையும் இல்லை என தெரிவித்த அவர், எங்கேயும் பிரச்சினை இல்லாமல் மக்களிடம் பீதியை கிளப்புகின்றனர் எனவும் தெரிவித்தார்.

கேனில் பெட்ரோல் பிடித்து வைப்பது ரிஸ்க் என தெரிவித்த அவர், பொதுமக்கள் கேன்களில் பெட்ரோல் வாங்கி வைத்து ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் இந்த அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்தார். கேஸ், பெட்ரோல் போன்றவை எந்த பிரச்சினையும் இல்லை என தெரிவித்த அவர், தி.மு.க அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சியினர் பீதியை கிளப்புகின்றனர் என தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினர் தேவையில்லாமல் இடையூறு ஏற்படுத்துகின்றனர் என தெரிவித்த அவர், வசந்த் அன் கோவில் இன்டக்ஸ்சன் ஸ்டவ் விற்க வேண்டும் என்பதற்காக , சிலிண்டர் தட்டுப்பாடு என காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் மக்களவையில் பேசி கொண்டு இருக்கின்றார் என குற்றம்சாட்டினார். பாராளுமன்ற மாண்பை காங்கிரஸ் கட்சியினர் குறைக்கின்றனர் என தெரிவித்த அவர்,

கமர்சியல் சிலிண்டர் பிரச்சினை தீர்ந்து இருக்கின்றது, ஹோட்டல்களில் சிலிண்டர்கள் கிடைக்கிறது எனவும் தெரிவித்தார். விளாத்திகுளத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் செல்ல வேண்டும் என தெரிவித்த அவர்,

உள்துறை செயலாளர் கொடுக்கும் தகவல்கள் பொய்யாக இருக்கின்றது எனவும் தரவுகள் திரித்து சொல்லபடுகின்றது எனவும் தெரிவித்தார். தே.ஜ.கூ தலைவர்கள் இணைந்து பெண்களுக்கு எதிரான, குழந்தைகளுக்கு எதிராக வன்முறைகளை கண்டித்து போராட்டம் நடத்தப்பட இருக்கின்றது எனவும், தே.ஜ.கூட்டணியாக இணைந்து போராட்டம் நடத்த இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழகத்தை பொறுத்த வரை அவர்கள் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் என்ன நடந்தது என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும் எனவும், இன்று புதியதாக எந்த தகவலும் இல்லை எனவும் தெரிவித்தார். தமிழக தேர்தல் களம் சூடு பிடித்து இருக்கின்றது , எங்கள் கூட்டணி பலமாக இருக்கின்றது என தெரிவித்த அவர்,

யாரையும் எதிர் பார்த்து இல்லை எனவும் மற்ற கட்சிகள் பேசினால் அதை அவர்களிடம் கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கூடுதல் கட்சிக்கு சீட் கொடுக்கும் போது , எங்களுக்கு ஏன் கொடுக்க வில்லை என சி.பி.எம் கட்சியினர் கேட்கின்றனர் என தெரிவித்த அவர், கம்பீரமாக பேசிய வைகோ இன்று 3 சீட் உதய சூரியன் சின்னத்தில் என குரல் கம்மி பேசுகின்றார் எனவும், 3 சீட்டுகளுடன் இருந்த கொ.ம.தே.க இப்போது இரண்டு சீட்டாக குறைத்து இருக்கின்றது எனவும், திருமாவளவன் இவர்கள் கொடுக்கும் சீட்டுகளை ஏற்க மாட்டார் எனவும் தெரிவித்த அவர், தங்களுடன் பயணித்தவர்களுக்கு சீட் குறைக்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார். கூட்டணியில் மாற்றம் வர வாய்ப்பு இருக்கின்றது என தெரிவித்த அவர்,தேர்தலுக்கு முன்பு ஏதாவது ஒரு டிவிஸ்ட் வரும், இந்த முறை என்ன டிவிஸ்ட் இருக்கு என பார்க்கலாம் என தெரிவித்தார்.

சி.பி.ஐ விசாரணை என கேட்டது தமிழக வெற்றி கழகம் , அவர்கள் கேட்டதால் சப்போர்ட் பண்ணினோம் எனவும் தெரிவித்தார். ஜனநாயகன் படம் பற்றி விஜயே பேச வில்லை, முதலில் அவர் பேசினால் அப்புறம் பேசுகின்றேன் எனவும் இதில் பா.ஜ.கவை யாருமே குற்றம் சுமத்த வில்லை எனவும் தெரிவித்தார். திமுக மட்டும் தான் குற்றம்சாட்டுகின்றது, அவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை எனவும் தெரிவித்தார். முதல்வர் தேவா,ஜீவா என இரு குழந்தைகளை வர வழைத்து பேசி இருக்கின்றார் எனவும்,

அரசு பள்ளியில் கஞ்சாவை கட்டுப்படுத்தினால் போதும் மற்றவை சரியாகிவிடும் என தெரிவித்தார்.

மற்ற மாநிலங்களில் 16 வயது வரை சமூக வலைதளங்களை கட்டுப்படுத்தி இருக்கின்றனர் என தெரிவித்த அவர்,

இங்கு முதல்வர் ஸ்டாலின் படிக்கும் குழந்தைகளை அழைத்து ரீல் போட வைத்து , அவர்களிடம் பேசி இருக்கின்றார் எனவும், முதல்வரின் கவனம் தமிழகத்தின் மீது இல்லை, ரீல்ஸ் போடும் முதல்வராக இருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.

கரூர் விவகாரத்திற்கு செந்தில்பாலாஜியை கண்டிப்பாக சி.பி.ஐ விசாரணைக்கு அழைக்க வேண்டும் என தெரிவித்த அவர், பத்து ரூபாய் பாலாஜி என சொன்ன போது தான் செருப்பு வந்து விழுந்தது என குறிப்பிட்ட அவர், மருத்துவமனைக்கு முதல் ஆளாக வந்தவர் செந்தில் பாலாஜி என்பவர் அவரை சி.பி.ஐ விசாரிக்கலாம் எனவும் தெரிவித்தார். த.வெ.க மாவட்ட செயலாளர் , தமிழக அரசு அதிகாரிகள் என அனைவரையும் சி.பி.ஐ விசாரித்து இருக்கின்றனர் என தெரிவித்த அவர்,

செந்தில்பாலாஜியை விசாரணைக்கு சி.பி.ஐ அழைத்தது முழுமையிலும் சரியான பார்வை எனவும் தெரிவித்தார். சி.பி.ஐ கூப்பிட்டால் போய் பதில் சொல்லி விட்டு வரலாமே என தெரிவித்த அவர், அவர் சி.பி.ஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தேர்தலுக்கு முன்பு எப்போதும் டிவிஸ்ட் இருக்கும், இந்த முறை என்ன டிவிஸ்ட் என பார்க்கலாம் என தெரிவித்த அவர்,

தே.ஜ.கூட்டணி வலுவாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார். அதிமுக தொண்டர்கள் வெறியுடன் இருக்கின்றனர் , பா.ஜ.க தொண்டர்களும் பிரதமர் சொல்லி விட்டார் என வெறியுடன் களத்தில் இருக்கின்றனர் என தெரிவித்த அவர், ஆனால் தி.மு.க வினர் ஏதோ சாதித்த மாதிரி அவர்களின் உடல்மொழி இருக்கிறது எனவும் தெரிவித்தார்.

பா.ஜ.க வின் உண்மையான தொண்டன், அதிமுகவை 2024 தேர்தலில் விமர்சித்து உண்மை தான் என தெரிவித்த அவர், இப்போது கூட்டணியில் இருப்பதால் ஒரு தொண்டனாக ஏற்றுக் கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமியும என் மீது விமர்சனம் வைத்து உள்ளார்கள், எனவும் அரசியலில் பின்னாடி பார்த்தால் அரசியல செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.

தேர்தலில் கட்சி என்ன சொல்கின்றதோ அதை செய்வோம் எனவும், சீட் கொடுங்க என எப்போதும் யாரிடமும் கேட்டதில்லை எனவும், நானாக போய் கேட்கும் நிலையிலும் இல்லை எனவும், கட்சி தேவையை விட எனக்கு அதிகமாக கொடுத்து இருக்கின்றது என பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்...

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: