சனி, 14 மார்ச், 2026

கோவையில் மருத்துவரின் தாயாரை கொன்று நகை - பணம் கொள்ளை சம்பவம் : தம்பதி நேற்பாளுக்கு தப்பி ஓட்டமா ? - தனிப்படை தீவிர விசாரணை !!!

SHARE

கோவையில் மருத்துவரின் தாயாரை கொன்று நகை - பணம் கொள்ளை சம்பவம் : தம்பதி நேற்பாளுக்கு தப்பி ஓட்டமா ? - தனிப்படை தீவிர விசாரணை !!!

கோவையில் மருத்துவர் தாயாரை கொலை செய்து விட்டு, நகை - பணத்தை கொள்ளை அடித்து தம்பதி நேபாள நாட்டிற்கு தப்பி சென்று விட்டார்களா ? என்பது குறித்து தனிப்பட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை, நஞ்சுண்டாபுரம் சேர்ந்தவர் மருத்துவர் ராம்குமார் குட்டி. இவருடைய தாயார் கஸ்தூரி வயது 82, இவருக்கு உதவியாக வீட்டில் வேலை செய்ய நேபாள நாட்டைச் சேர்ந்த சுர்ஜா என்பவரை நான்கு மாதங்களுக்கு முன்பு சேர்த்தனர். அந்த வீட்டில் ஏராளமான நகை - பணம் இருப்பதை பார்த்து சுர்ஜா தனது கணவர் ராஜூ மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கொள்ளை அடிக்க திட்டமிட்டார். அதன்படி கடந்த 6 ஆம் தேதி நள்ளிரவில் 12:30 மணிக்கு ராஜூ மூணு பேருடன் கஸ்தூரி வீட்டிற்குள் சென்றார். பின்னர் அவர்கள் 4 பேரும் சுர்ஜாயுடன் சேர்ந்து கஸ்தூரி கொலை, செய்து விட்டு நகை - பணத்தை கொள்ளை அடித்துச் சென்றனர். இது குறித்து ராமநாதபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த கொலை தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி நேபாளத்தை சேர்ந்த ராகேஷ் சவுத், திலீப் சாகி, தாமூர் புக்தா ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவான சுர்ஜா, ராஜூ தம்பதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர்கள் நேபாள நாட்டுக்கு தப்பி சென்று விட்டார்களா ? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து காவல் துறையினர் கூறும் போது

 நேபாள நாட்டில் இருந்து இந்தியா வர விசா, பாஸ்போர்ட் தேவை இல்லை, இதனால் சுர்ஜா தனது கணவர் ராஜூ மற்றும் உறவினர்களுடன் பெங்களூரில் வந்து உள்ளார். பின்னர் சென்னையில் சேர்ந்த முகவர் ஒருவர் மூலம் கோவையில் வேலை சேர்ந்து உள்ளார். பின்னர் அவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து மூதாட்டியை கொலை செய்து விட்டு நகை - பணத்தை கொள்ளை அடித்து விட்டு காரில் பெங்களூரு சென்று உள்ளனர். அங்கு வீடு எடுத்து தங்கி ரூபாய் 10 ஆயிரம் முன்பணம் கொடுத்து உள்ளனர். மேலும் நேபாளத்திற்கு எப்பொழுது விமானம் செல்லும் என்றும் கேட்டு உள்ளனர். இதனால் அவர்கள் நேபாளத்துக்கு தப்பி சென்றார்களா ? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் அங்கு தப்பி சென்று விட்டால், அந்த நாட்டுக்குள் சென்று பிடிக்க முடியாது. அதற்கு பதிலாக அந்த தம்பதியின் புகைப்படத்துடன் கூடிய தகவல் மத்திய அரசு மூலம் நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பெயரில் அங்கு உள்ள போலீசார் தம்பதியை கைது செய்து நேபாள சிறையில் அடைப்பார்கள். அவர்கள் நேபாளத்துக்கு தப்பிச் செல்வதை தடுக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: