ஞாயிறு, 22 மார்ச், 2026

விளாத்திகுளம் மாணவி வழக்கு : குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வாங்கி தரப்படும் - கனிமொழி எம்.பி உறுதி !!!

SHARE

 விளாத்திகுளம் மாணவி வழக்கு : குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வாங்கி தரப்படும் - கனிமொழி எம்.பி உறுதி !!!

விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வாங்கி தரப்படும் என கனிமொழி எம்.பி உறுதி அளித்து உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் கடந்த மார்ச் 10-ம் தேதி 12-ம் வகுப்பு பள்ளி மாணவி மாயமான நிலையில், மறுநாள் காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இதில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரித்த நிலையில், சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் 19-ம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த மாவீரன் (எ) தர்ம மூனிஸ்வரனை (30) நபரை கைது செய்தனர்.

இதனை அடுத்து, மாணவியின் உடலை வாங்க மறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்ட வந்த மாணவியின் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள், 20-ம் தேதி உடலை பெற்று தகனம் செய்தனர்.

இந்நிலையில், இன்று (மார்ச் 22) மாணவியின் குடும்பத்தை தி.மு.க எம்.பி கனிமொழி மற்றும் அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியவர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை வாங்கி தரப்படும். உங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்போம், கொலை செய்யப்பட்ட மாணவியின் சகோதரி கல்வி செலவு மற்றும் வேலைக்கான அனைத்து உதவியும் செய்வோம். தைரியமாக இருங்கள் என்று மாணவியின் குடும்பத்தினருக்கு எம்.பி. கனிமொழி ஆறுதல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி. செய்தியாளர்களிடம் பேசுகையில், ”பாதிக்கப்பட்ட அந்த மாணவியின் குடும்பத்திற்கு மன நிம்மதி தரும் வகையிலும், ஒரு சிறிய அமைதியை கொடுக்கும் வகையிலும் காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து உள்ளனர். நிச்சயமாக இப்படிப்பட்ட குற்றவாளிக்கு, அந்த பெண்ணிற்கு நியாயம் கிடைக்கும் வகையில் உச்சபட்ச தண்டனை வாங்கி தரப்படும். இது போன்ற சம்பவங்களை தடுப்பதற்கு சட்டங்கள் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் அந்த சட்டங்கள் செயல் படுத்தப்படும்” என்றார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: