வெள்ளி, 6 மார்ச், 2026

மத்திய கிழக்கில் பதற்றம்: சி.பி.எஸ்.இ தேர்வுகள் ரத்து !!!

SHARE

 மத்திய கிழக்கில் பதற்றம்: சி.பி.எஸ்.இ தேர்வுகள் ரத்து !!!

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக சி.பி.எஸ்.இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய கிழக்கின் சில பகுதிகளில் (பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம்) நிலவும் பதற்றம் காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகளை நடத்துவது குறித்து மதிப்பாய்வு செய்து வருவதாக சிபிஎஸ்இ அறிவித்து உள்ளது.

10 ஆம் வகுப்புக்கு மார்ச் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையில் திட்டமிடப்பட் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேலும், மார்ச் 2, 5, 6 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளும் ரத்து செய்யப்படுகின்றன.

12 ஆம் வகுப்புக்கு மார்ச் 7 ஆம் தேதியில் திட்டமிடப்பட்ட தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. மேலும், நிலைமையை மறுஆய்வு செய்து, தேர்வுகள் குறித்து உரிய வழிகாட்டுகளை வழங்கப்படும்.

மாணவர்கள், தங்கள் பள்ளிகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும், அதிகாரப் பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றவும் சி.பி.எஸ்.இ அறிவுறுத்தி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: