வெள்ளி, 6 மார்ச், 2026

தங்கம் விலை தொடா் சரிவு !!!

SHARE

 தங்கம் விலை தொடா் சரிவு !!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,20,960-க்கு விற்பனையாகிறது.

சா்வதேச அளவில் போா்ப் பதற்றம் நிலவி வருவதை அடுத்து தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நான்காவது நாளாக நேற்றும் தங்கம் விலை குறைந்து உள்ள மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்து உள்ளது.

சென்னையில் தங்கம் விலை இந்த வாரம் தொடக்கம் முதலே குறைந்த வண்ணம் உள்ளது. கடந்த மாா்ச் 2-இல் பவுனுக்கு ரூ.920, மாா்ச் 3-இல் பவுனுக்கு ரூ.1,560 குறைந்தது. மார்ச் 4 -இல் பவுனுக்கு ரூ.2,120 குறைந்தது.

இந்த நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.15,120-க்கும், பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1.20,960-க்கும் விற்பனையாகிறது

கடந்த நான்கு நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.5,240 குறைந்து உள்ளது.

ஆனால், வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.295-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.95 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

சா்வதேச அளவில் போா்ப் பதற்றம் நிலவி வரும் போது, தங்கம் விலை உயா்வது வழக்கமான ஒன்றாகும். ஆனால், இந்த முறை மத்திய கிழக்கு நாடுகளில் போா் தீவிரம் அடைந்து உள்ள சூழலில் பொருளாதார ரீதியாக இதன்விளைவு எவ்வாறு இருக்கும் எனக் கணிக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. முதலீட்டாளா்கள் பெரும் குழப்பத்தில் உள்ளதால், தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்ய தயக்கம் காட்டி வருவதாகவும், விரைவில் இந்த நிலை மாறி தங்கம் விலை மீண்டும் உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: