திருமண நிகழ்ச்சிக்கு ஒன்றாகச் சென்ற விஜய் - த்ரிஷா !!!
ஏ.ஜி.எஸ். தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யும், த்ரிஷாவும் ஒரே காரில் சென்று பங்கேற்றனர்.
விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சர்ச்சைகள் எழுந்த நிலையில், தற்போது விஜய்யும் த்ரிஷாவும் ஒரே காரில் நிகழ்ச்சிக்குச் சென்று உள்ளதாக பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
ஜன நாயகன் திரைப்படத்துக்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி முழு நேர அரசியலில் விஜய் களம் இறங்கி உள்ளார். சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி முக்கிய மாவட்டங்களில் மாநாடுகளை நடத்தி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதன் இடையே, விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையை, நடிகையுடன் ஒப்பிட்டு பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் பேசி இருந்தது சர்ச்சையாகி இருந்தது. பின்னர் இதற்கு வருத்தம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், த.வெ.க தலைவர் விஜய்யும், த்ரிஷாவும் சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒரே காரில் சென்று பங்கேற்று உள்ளனர்.
ஏ.ஜி.எஸ். தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கல்பாத்தி சுரேஷ் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருவரும் ஒரே நிற உடையில் பங்கேற்றனர். இது தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய்யும் த்ரிஷாவும் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ ஆகிய படங்களில் இணைந்து நடித்து உள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக அமைந்தன.

0 கருத்துகள்: