வி.கே.சசிகலா கட்சியினர் கொடியேற்றம்...
வி.கே.சசிகலாவின் புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியினர் முதுகுளத்துார் பகுதியில் வெள்ளிக்கிழமை கொடியேறினர்.
வி.கே.சசிகலாவின் புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியினர் முதுகுளத்துார் பகுதியில் கொடியேறினர்.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் கடந்த 24-ஆம் தேதி வி.கே.சசிகலா பொதுக் கூட்டம் நடத்தினார். அதில் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார்.
இதை அடுத்து சென்னையில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியின் பெயரை அறிவித்து, தென்னந்தோப்பு சின்னத்தையும் அறிமுகம் செய்தார்.
இந்த நிலையில், முதுகுளத்துார் சட்டப்பேரவைத் தொகுதியில் கடலாடி, முதுகுளத்தூர், சிக்கல் ஆகிய பகுதிகளில் அந்தக் கட்சியின் சார்பில் கொடியேற்றும் விழா நடைபெற்றது. முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ராஜேஸ்வரனின் மகன் ராமேஷ்குமார் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சசிகலாவின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்: