கூட்டணியில் இணையலாமா? மாவட்டச் செயலா்களுடன் தவெக ஆலோசனை !!!
வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் மற்றொரு கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது குறித்து த.வெ.க மாவட்டச் செயலர்களுடன், தலைமை நிா்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
த.வெ.க தலைவர் விஜய், தனது கட்சி தலைமையிலான கூட்டணியில் ஆட்சியில் பங்கு வழங்கப்படும் என அறிவித்தார். இருப்பினும், இதுவரை எந்தக் கட்சியும் த.வெ.க வுடன் கூட்டணி அமைக்க முன் வரவில்லை. இதைத் தொடா்ந்து, வரும் பேரவைத் தோ்தலில் த.வெ.க தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்து, வேட்பாளா்கள் நேர்காணல் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, தேர்தலில் தனித்துப் போட்டியிடலாமா ? அல்லது வேறொரு கூட்டணியில் இணைந்து போட்டியிடலாமா ? என்பது குறித்து த.வெ.க பொதுச் செயலர் என்.ஆனந்த் தலைமையில், மாவட்டச் செயலர்களுடன் இணையவழியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மொத்தம் 120 மாவட்டச் செயலர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 98 பேர் மற்றொரு கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதற்கு ஆதரவு தெரிவித்து உள்ளதாக அந்தக் கட்சியினர் தெரிவித்தனர்.

0 கருத்துகள்: