திங்கள், 16 மார்ச், 2026

நடிகையின் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக எடிட் செய்து பதிவிட்டவர் கைது !!!

SHARE

 நடிகையின் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக எடிட் செய்து பதிவிட்டவர் கைது !!!

நடிகை அனசுயா பரத்வாஜ் பற்றி ஆபாசமாகப் பதிவிட்டவர் கைது செய்யப்பட்டது குறித்து...

தொகுப்பாளினியாக இருந்து நடிகையாக முன்னேற்றம் கண்டு உள்ள அனசுயா பரத்வாஜ் புகைப்படங்களை ஆபாசமாக ஏஐ மூலம் எடிட் செய்து பதிவிட்டவர் சைபர் கிரைம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

நடிகையின் புகைப் படங்கள், விடியோக்களை எடிட் செய்து சமூக வலைதளத்தில் ஆபாசமாகப் பதிவிட்டதால் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஹைதராபாத் சைபர் கிரைம் அதிகாரிகள் ஆந்திரப் பிரதேசம், கடப்பா மாவட்டம், இந்திரா நகரில் வசிக்கும் ஜனார்தன் (29 வயது) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

நடிகையின் புகைப்படங்களை ஆபாசமாக சித்திரித்தும், கமெண்ட்டுகளில் மோசமாக பதிவிட்டதும் என சமூக வலைதளத்தில் தொல்லைக் கொடுத்து பதிவிட்டதை, விசாரணையின் போது கைதானவர் ஒப்புக் கொண்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி நடிகை அளித்த புகாரின் படி இவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

அவதூறாகவும், ஆபாசமாகவும் பதிவிடுவதைக் கண்டித்து சைபர் கிரைம் அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் விடுத்து உள்ளார்கள்.

நடிகை அனசுயா தெலுங்கு திரைப்படங்களில் ரங்கஸ்தலம், புஷ்பா படங்களில் நடித்து புகழ் பெற்றார். பிளாஸ்பேக், வுல்ஃப் எனும் தமிழ்ப் படங்களிலும் நடித்து வருகிறார்.

(சைபர் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்)...

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: