கோலாகலத் திருக்கல்யாணம்: விசாலாட்சி - விஸ்வநாதேஷ்வரர் அருளில் திளைத்த பக்தர்கள்!
ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் 16-வது ஆண்டு ஸ்ம்வத்ஸர அபிஷேகம் மற்றும் விசேஷ சண்டி ஹோமம் - பக்திப் பரவசத்தில் கோவை மக்கள் !!!
கோவையில் ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் நடைபெற்ற விசாலாட்சி–விஸ்வநா தேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவை இடையர்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தாய் மூகாம்பிகை அம்மன் கோவிலில் 16வது ஆண்டு ஸ்ம்வத்ஸர அபிஷேகம் மற்றும் விசேஷ சண்டி ஹோமம் நடைபெற்றது.இதில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மணிகண்ட சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற இதில் வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலை அமைக்கப்பட்டு விசேஷ சண்டி ஹோமம் நடைபெற்றது.வேத முறைப்படி ஹோமக் கிரியைகளை நடத்தி, உலக நலன் மற்றும் பக்தர்களின் வளமான வாழ்விற்காக சிறப்பு பிரார்த்தனைகள் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, விசாலாட்சி அம்பிகா மற்றும் விஸ்வநாதேஷ்வரர் சுவாமிகளுக்கு திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. திருமண நிகழ்வை ஒட்டி மங்கள இசைகள் முழங்க, சாமிகளுக்கு புனித அலங்காரம் செய்யப்பட்டு, பாரம்பரிய முறையில் கல்யாணம் நடத்தப்பட்டது. இந்த திருக்கல்யாணத்தை காண பக்தர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்வில் உள்ளூர் பக்தர்கள், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்


0 கருத்துகள்: