சனி, 4 ஏப்ரல், 2026

கோவையின் 'மகள்' களம் இறங்கினார் : பெற்றோரின் பாதம் பணிந்து ஆசீர்வாதம் வாங்கிய பா.ஜ.க வடக்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ !!!

SHARE

 கோவையின் 'மகள்' களம் இறங்கினார் : பெற்றோரின் பாதம் பணிந்து ஆசீர்வாதம் வாங்கிய பா.ஜ.க வடக்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ !!!

கோவை, ​புலியகுளம் விநாயகர் கோவிலில் வழிபாடு - அ.தி.மு.க தலைமையகம் சென்று அம்மன் அர்ஜுனனிடம் வாழ்த்துப் பெற்றார் !!!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, தனது தேர்தல் பரப்புரையை மிகவும் உணர்வுப் பூர்வமான முறையில் தொடங்கினார்.

 சென்னையில இருந்து கோவை விமான நிலையம் வந்திறங்கிய அவர், நேராகப் புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு இருந்து புறப்பட்ட அவர், அரசியல் நாகரிகத்தின் ஒரு பகுதியாக கோவை அ.தி.மு.க தலைமையகமான 'இதய தெய்வம் மாளிகை'க்குச் சென்று, அங்கு அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனனைச் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்துப் பெற்றார்.

​அரசியல் சந்திப்புகளை முடித்துக் கொண்டு, தனது சொந்த ஊரான தொண்டாமுத்தூர் அருகே உள்ள உளியம்பாளையம் கிராமத்திற்கு வானதி சீனிவாசன் சென்றார். 

அங்கு உள்ள தனது இல்லத்தில் சென்ற அவருக்கு அவரது குடும்பத்தினர் ஆராத்தி எடுத்து திருஷ்டி கழித்தனர். பின்னர் வீட்டில் முன்பு இருந்த தந்தை கந்தசாமி மற்றும் தாயார் பூவாத்தாள் ஆகியோரைச் சந்தித்து, அவர்களது கால்களில் விழுந்து வணங்கி நெகிழ்ச்சியுடன் ஆசீர்வாதம் பெற்றார். 

"எத்தனை பெரிய பதவியில் இருந்தாலும் பெற்றோரின் ஆசியே எனக்குப் பெரிய பலம்" எனத் தெரிவித்த அவர், கிராம மக்களுடனும் சிறிது நேரம் உரையாடினார். 

தேர்தல் களம் சூடுபிடித்து உள்ள நிலையில் நாளை முதல் தனது சூறாவளிப் பிரச்சாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது...

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: