சனி, 11 ஏப்ரல், 2026

மருத்துவமனையில் வானதி சீனிவாசன் : தாய்க்காகக் களமிறங்கிய மகன் ஆதர்ஷ் - அண்ணாமலையுடன் இணைந்து கோவை வடக்கில் வாக்குச் சேகரிப்பு !!!

SHARE

 மருத்துவமனையில் வானதி சீனிவாசன் : தாய்க்காகக் களமிறங்கிய மகன் ஆதர்ஷ் - அண்ணாமலையுடன் இணைந்து கோவை வடக்கில் வாக்குச் சேகரிப்பு !!!


 அக்காவுக்காக மகன் வந்து உள்ளார்" - கோவையில் அண்ணாமலை முன்னிலையில் வாக்குச் சேகரித்த ஆதர்ஷ் !!!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. அவர்கள், காலில் ஏற்பட்ட வீக்கம் மற்றும் அதீத சோர்வு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். வேட்பாளர் ஓய்வில் இருக்கும் நிலையில், தேர்தல் களம் தொய்வடையாமல் இருக்க அவரது மகன் ஆதர்ஷ், பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கி உள்ளார்.

​தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், தனது தாயின் உடல்நிலை காரணமாகப் பிரச்சாரம் தடைபடக் கூடாது என்பதற்காக, வானதி சீனிவாசனின் மகன் ஆதர்ஷ் இன்று காலை முதல் அண்ணாமலையுடன் இணைந்து கோவை வடக்கின் கண்ணப்பன் நகர், தயிரிட்டேரி, சம்பத் வீதி, ரத்தினபுரி வீதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

 கண்ணப்ப நகர் மற்றும் ரத்தினபுரி பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது, இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆதர்ஷுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 அண்ணாமலையுடன் வாகனத்தில் நின்றபடி, தனது தாய்க்குத் தாமரை சின்னத்தில் வாக்களிக்குமாறு அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

​"வானதி அக்கா மருத்துவமனையில் ஓய்வில் இருந்தாலும், அவரது மகன் மற்றும் நாங்கள் அனைவரும் அக்காவுக்காக இந்தத் தொகுதியில் உழைக்கிறோம்" என அண்ணாமலை தனது உரையின் போது குறிப்பிட்டார்.

​மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ள வானதி சீனிவாசன், இன்னும் 24 முதல் 48 மணி நேரத்திற்குள் மீண்டும் பிரச்சாரத்திற்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 வேட்பாளர் இல்லாத நிலையிலும், அவரது மகன் மற்றும் கூட்டணிக் கட்சியினரின் இந்த ஒற்றுமையான செயல்பாடு கோவை வடக்குத் தொகுதி வாக்காளர்கள் இடையே நெகிழ்ச்சியையும், கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

​அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க வின் முக்கிய நிர்வாகிகள் இந்த உணர்ச்சிப்பூர்வமான பிரச்சாரப் பயணத்தில் உடன் இருந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: