பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வுக்கு திடீர் உடல்நலக்குறைவு : கோவை வடக்கில் நாளை அண்ணாமலை சூறாவளிப் பிரச்சாரம் !!!
மருத்துவர்கள் அறிவுறுத்தலால் எம்.எல்.ஏ வானதி ஓய்வு - அக்காவிற்காக களமிறங்கும் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை !!!
கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. அவர்களுக்குத் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உள்ளது.
தேர்தல் தேதி நெருங்கி வருவதால், கடந்த சில நாட்களாக வானதி சீனிவாசன் தொகுதி முழுவதும் சளைக்காமல் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.
அதிகாலை முதல் நள்ளிரவு வரை நடந்த இந்தப் பிரச்சாரப் பயணத்தின் காரணமாக, அவருக்குக் காலில் கடுமையான வீக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனைப் பரிசோதித்த மருத்துவர்கள், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவரை அடுத்த 48 மணி நேரம் முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
வானதி சீனிவாசன் ஓய்வில் இருக்கும் நிலையில், பிரச்சாரப் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும் என்பதற்காகத் தமிழக பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நாளை கோவை வடக்குத் தொகுதியில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
வானதி சீனிவாசனை ஆதரித்து அண்ணாமலையின் தேர்தல் பரப்புரை.
நாள் & நேரம்: நாளை (ஏப்ரல் 11), காலை 9:00 மணி. இடம்: மேட்டுப்பாளையம் சாலை, தீயணைப்பு நிலையம் (Fire Station) அருகில்.
தனது 'சகோதரி' வானதி சீனிவாசனுக்காக அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரையை மேற்கொள்ள உள்ளார் ...
நாளை காலை மேட்டுப்பாளையம் சாலையில் தொடங்கும் இந்தப் பிரச்சாரப் பயணத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
காலில் ஏற்பட்ட வீக்கம் குணம் அடைந்தவுடன், வானதி சீனிவாசன் மீண்டும் தனது இறுதி கட்டப் பிரச்சாரத்தைத் தொடங்குவார்..


0 கருத்துகள்: