செவ்வாய், 14 ஏப்ரல், 2026

அண்ணனைத் தொடர்ந்து தம்பியும் களத்தில்" ; கோவை வடக்கில் வானதி சீனிவாசன் இளைய மகன் கைலாஷ் அதிரடி பிரச்சாரம் !!!

SHARE

 அண்ணனைத் தொடர்ந்து தம்பியும் களத்தில்" ; கோவை வடக்கில் வானதி சீனிவாசன் இளைய மகன் கைலாஷ் அதிரடி பிரச்சாரம் !!!

கோவை சங்கனூரில் வீடு, வீடாக வாக்குச் சேகரிப்பு : தாய்க்குப் பதில் களம் இறங்கிய மகன்களால் உற்சாகம் அடைந்த தொண்டர்கள் !!!

 கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, உடல்நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது குடும்பத்தினர் தேர்தல் களத்தை முழுமையாகத் தோளில் சுமக்கத் தொடங்கி உள்ளனர். ஏற்கனவே மூத்த மகன் ஆதர்ஷ் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று முதல் இளைய புதல்வர் கைலாஷ் தேர்தல் களத்தில்  இவரை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

கோவை, சங்கனூர் ​வார்டு எண் 46 A-க்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதிகளில், கைலாஷ் இன்று நேரில் சென்று வீடு, வீடாகத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். தனது தாயின் உடல்நிலை குறித்து மக்களிடம் நெகிழ்ச்சியுடன் பேசிய அவர், தாமரைச் சின்னத்திற்குப் பேராதரவு வழங்கக் கேட்டுக் கொண்டார்.

 "அம்மா விரைவில் குணமடைந்து மக்கள் பணிக்காக வருவார், அதுவரை அவரது பிரதிநிதியாக நான் உங்கள் கதவுகளைத் தட்டுகிறேன்" என அவர் பேசியது வாக்கு சேகரித்தார்.

வாக்குச் சேகரிப்பு நிகழ்வின் போது, அ.தி.மு.க, பா.ஜ.க மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

வேட்பாளர் வானதி சீனிவாசன் மருத்துவமனையில் இருந்தாலும், அவரது இரு மகன்களும் தொகுதி முழுவதும் பிரிந்து சென்று தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து வருவது கூட்டணி தொண்டர்களுக்குப் புதிய உத்வேகத்தையும், உற்சாகத்தையும் கொடுத்து உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: