பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது" - மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி !!!
கோவை, வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலும், பிரதமர் நரேந்திர மோடியின் உரையைச் செவிமடுத்துத் தனது கருத்தைப் பகிர்ந்து உள்ளார்.
தமிழக பா.ஜ.க தொண்டர்களுடன் பிரதமர் மோடி நிகழ்த்திய ‘எனது பூத், வலிமையான பூத்’ கலந்துரையாடல் நிகழ்வு, தனக்குப் புதிய உத்வேகத்தையும் மனவலிமையையும் கொடுத்து உள்ளதாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன், பிரதமரின் வார்த்தைகள் தனது லட்சிய உறுதியை மேலும் பலப்படுத்தி உள்ளதாகக் குறிப்பிட்டு உள்ளார்.
"மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தச் சூழலிலும், பிரதமரின் ஊக்கமளிக்கும் பேச்சு தமிழகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தை தனக்குள் ஆழமாக விதைத்து உள்ளது" எனத் தெரிவித்து உள்ளார்.
மேலும், தனது உடல்நலம் குறித்துத் தொடர்ந்து விசாரித்து வரும் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்ட அவர், "உங்களின் பிரார்த்தனைகளுக்கும் ஆசிகளுக்கும் நான் மீண்டும் ஒருமுறை நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு உள்ளார்.

0 கருத்துகள்: