"விஜய் பட திருட்டு வெளியீடு: வாக்குகள் கிடைக்காது" – கோவையில் காயத்ரி ரகுராம் 'ஷாக்' பேட்டி !!!
சினிமாவில் விஜய் நாயகன் என்றால் மக்களின் நாயகன் எடப்பாடியார்தான்: பரப்புரையில் அதிரடி காட்டிய நடிகை !!!
கோவை காமராஜபுரம் பகுதியில் தெற்கு தொகுதி என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர் அம்மன் அர்ஜுனனை ஆதரித்து நடிகை காயத்ரி ரகுராம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவைக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக தான் என்றும், திமுக அரசு அவற்றில் வெறும் “ஸ்டிக்கர்” ஒட்டும் பணியே செய்ததாகவும் குற்றம்சாட்டினார். திமுக என்பது வெறும் பிம்ப அரசியல் மற்றும் ஊழல் நிரம்பிய கட்சி என்றும் அவர் விமர்சித்தார்.
மேலும் நடிகர் விஜய் குறித்து பேசிய அவர், விஜய் ஒரு பெரிய சினிமா நட்சத்திரம் என்பதால் மட்டுமே அவரை பார்க்க மக்கள் கூட்டம் திரளுகிறது எனக் கூறினார். அவரது கட்சியில் உள்ள வேட்பாளர்கள் அனுபவமற்றவர்கள் என்றும், “கத்துக்குட்டி” நிலைமை தான் இருப்பதாகவும் விமர்சித்தார்.
வாக்குகள் சிதறக்கூடாது என்பதையும் வலியுறுத்திய அவர், அரசியலில் விஜய் இன்னும் புதியவர் என்பதால் வெற்றி பெறுவது கடினம் என்றும் தெரிவித்தார். “சினிமாவில் நாயகன் விஜய் என்றால், மக்களின் நாயகன் எடப்பாடியார் தான்” எனவும் அவர் கூறினார்.
‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் வெளியானது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அந்த படம் மக்களின் ஈர்ப்பை பெறும் நோக்கில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். அந்தப் படத்தை பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் விஜய்க்கு வாக்குகள் கிடைக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகிய கட்சிகளுக்கு பேச எதுவும் இல்லை என்றும், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

0 கருத்துகள்: