கோவை வடக்குத் தொகுதியில் வானதி கண்ணை மூடிக்கொண்டு ஜெயிப்பார்" - கோவையில் அண்ணாமலை அதிரடிப் பேட்டி !!!
"முதல்வரின் பொய்களுக்குத் தினமும் பதில் அளிக்கப்படும்" - திமுக-வின் 'கரூர்' வியூகத்தை உடைப்போம் என அண்ணாமலை முழக்கம் !!!
கோவை பீளமேடு பகுதியில் ,
தனியார் ஹோட்டலில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது
இன்று முதல் தினமும் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படும் என தெரிவித்த அவர், பியூஸ் கோயல் அவர்களும் தினமும் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என தெரிவித்தார். தினமும் முதல்வர், உதயநிதி ஆகியோர் ஏதாவது பேசி கொண்டு இருக்கின்றனர் , அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக விளக்கம் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பா.ஜ.கவின் 28 வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்து இருக்கின்றனர் என தெரிவித்த அவர், முதல்வர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கின்றது FCRAதொடர்பா தவறான தகவல்களை சொல்கின்றனர் எனவும், FCRA சட்ட திருத்தங களை காங்கிரஸ்தான் கொண்டு வந்தது,
அதன் பின் சிறு சிறு திருத்தங்களை பா.ஜ.க கொண்டு வந்தது எனவும், இது சிறுபான்மையினருக்கு எதிரானது என முதல்வர் சொல்கின்றார் என தெரிவித்தார்.
மேலும் மெட்ரோ திட்டத்தில் மதுரை,கோவைக்கு எதுவும் செய்ய வில்லை என முதல்வர் சொல்கின்றார் என தெரிவித்த அவர், தமிழக அரசு Detailed project report யை திருத்தி கொடுத்தீர்களா இல்லையா ? என் கேள்வி எழுப்பிய அவர், மாநில அரசு இது வரை அந்த ரிப்போட்டை திருப்பி, திருத்தி கொடுக்க வில்லை என தெரிவித்தார்.
கேந்திரியா வித்யாலயா பள்ளியில தமிழ் சொல்லிதர ஆசிரியர் இல்லை என சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றது என தெரிவித்த அவர், 46 கேந்திரியா வித்யாலாவில் 40 பள்ளிகளில் தமிழ் மூலமாக படிக்க முடியும் எனவும் , தவறான செய்தியை வேண்டும் என்றே போடுவது தவறானது , இந்த செய்திகளை வெளியிட்ட சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் 18 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர் என தெரிவித்த அவர்,
செந்தில்பாலாஜி தொகுதியில், போட்டியிடும் வேட்பாளர்கள் சுயேட்சையாக இலவசங்களை கொடுக்க முயல்கின்றனர், இவர்களை கண்காணிக்க வேண்டும் என தெரிவித்தார்.
ஓரே ஊர் காரர்கள் 18 பேர் நிற்பதை கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் அண்ணாமலை தெரிவித்தார்.
முதல்வர் கோவைக்கு எதுவும் செய்யவில்லை என்கின்றார் , ஆனால் என்னென்ன செய்து இருக்கின்றோம் என்ற பட்டியலை கொடுக்கின்றோம் என கூறி அவற்றை பட்டியலிட்ட அண்ணாமலை, வாய் கூசாமல் எதுவுமே செய்ய வில்லை என முதல்வர் சொல்லி இருக்கின்றார் என தெரிவித்தார்.
தினமும் செய்தியாளர்களை சந்தித்து அரசியல் கட்சியினரின் பொய்களை விளக்க இருக்கின்றோம் என தெரிவித்த அவர், ஒரு சில நாளிதழ்களில் தவறான செய்திகள் உறுதிபடுத்தாமல் போட்டு இருக்கின்றனர் எனவும், நான் நிதின் நபின் அவர்களுக்கு எந்த கடிதமும் அனுப்ப வில்லை எனவும் தெரிவித்தார்.
23 ம் தேதி நான் எந்த பூத்தில் இருக்கின்றனோ அந்த பூத்தில் வேலை பார்ப்போம் என தெரிவித்த அவர், பி.ஆர்.ஜி அருண்குமாரிடமும் அதைதான் தெரிவித்தோம் என தெரிவித்தார்.
சீட் இல்லை என யாரும் அதிருப்தியில் இல்லை என தெரிவித்த அவர்,கோவை மாவட்டத்தில் ஒரு சீட் மட்டும் வாங்கியது குறித்து இப்போது பேச வேண்டாம் பிறகு பேசி கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.
பிரதமர் ஏப்ரல் 15 கன்னியாகுமரியில் பிரச்சாரம் செய்ய இருக்கின்றார். அதனை தொடர்ந்து சில தினங்களில் கோவையில் பிரச்சாரம் மேற்கொள்கின்றார் எனவும் தேதி பின்னர் தலைமை அறிவிக்கும் என தெரிவித்தார்.
கோவையில் தி.மு.க காரங்களே செந்தில்பாலாஜியை தோற்கடிப்பார்கள் என தெரிவித்த அவர்,
மானமுள்ள தி.மு.க தொண்டன் ,18 பேர் கரூரில் இருந்து வேட்பாளர்களை சுயேட்சையாக அறிவித்து இருப்பதை ஏற்க மாட்டார்கள் என தெரிவித்தார்.
இன்று கரூரும் போய்,கோவையும் இல்லாமல் செந்தில் பாலாஜி இருக்க போகின்றார் என தெரிவித்த அவர், அம்மன் அர்ஜூன் தரமான வேட்பாளர், அவர் வேகமான வேலையை பார்த்து தாக்கு பிடிக்க முடியாமல் இருக்கின்றார் என தெரிவித்தார்.
ED ஒன்றரை வருடமாக தேடிய அசோக் , கரூர் வேட்பாளரோடு போகின்றார் , அவர் டம்மி வேட்பாளராக கரூரில் இறக்கி இருக்கின்றனர் என தெரிவித்த அவர்,
கனிமொழி உதயநிதிக்கு போட்டியாக வந்து விடுவார் என அவருக்கு வாய்ப்பு கொடுக்க வில்லை எனவும் தெரிவித்தார்.
திருமாவளவனை மிரட்டி வேட்புமனுவை வாபஸ் வாங்க வைத்துள்ளனர் என தெரிவித்த அவர், கோவை தெற்கு தொகுதியில் பட்டி போட முடியாது, இங்கு அதற்கான இடமில்லாததால் போட முடியாது எனவும் தெரிவித்தார்.
நான் சீட்டு கேட்கவில்லை, சந்தேகமாக இருந்தால் எங்களது தலைவர்களிடம் கேட்டுப்பாருங்கள் என தெரிவித்த அவர், அடுத்து லோக்சபா தேர்தல் வரும்,
உமன் அமென்மென்ட் ஆக்ட் வந்தால்
தமிழகத்தில் 59 சீட் வரும் என தெரிவித்தார். சட்டமன்ற தேர்தல் கடைசி 10 நாள்களில் இரு முனை போட்டியாக மாறிவிடும், மக்கள் யாருக்கு ஓட்டு போடுவது என முடிவு செய்து விடுவார்கள் என தெரிவித்த அவர், களம் மாற ஆரம்பித்து விட்டது எனவும் தெரிவித்தார். கேரளாவில் நிறைய இடங்களில் பா.ஜ.க வெற்றி பெறும் , 2026 ல் பா.ஜ.கவிற்கு ஒரு திருப்பு முனையாக இருக்கும் என தெரிவித்த அவர், புதுச்சேரியில் தே.ஜ.கூ ஆட்சி அமையும் எனவும் தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிட நான் சீட் கேட்கவில்லை என தெரிவித்த அவர், மதுரையில் எந்த பாடமும் புகட்ட வில்லை .நீதி மன்றத்தில் மன்னிப்பு கேட்டது திமுக அரசு. பாடம் திமுகவிற்குதான் புகட்ட பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். கூட்டணியில் உள்ள அனைவருக்கும் சேர்த்து பிரச்சாரம் செய்வேன் என தெரிவித்த அவர்,
வடக்கு தொகுதியில் வானதி கண்ணை மூடிக்கொண்டு ஜெயிப்பார் எனவும் தெரிவித்தார்.

0 கருத்துகள்: