வெள்ளி, 10 ஏப்ரல், 2026

தி.மு.க கவுன்சிலர்கள் கரூர்க்காரருக்கு வசூல் ஏஜெண்டுகள்" ; அண்ணன் எஸ்.பி. வேலுமணி காலத்தில் கோவை சிங்காரமாக இருந்தது" – மாநகராட்சி நிர்வாகத்தைச் சாடிய வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ

SHARE

 தி.மு.க கவுன்சிலர்கள் கரூர்க்காரருக்கு வசூல் ஏஜெண்டுகள்" ; அண்ணன் எஸ்.பி. வேலுமணி காலத்தில் கோவை சிங்காரமாக இருந்தது" – மாநகராட்சி நிர்வாகத்தைச் சாடிய வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ !!!

கோவை மேயர் வீட்டின் முன்பே தி.மு.க-வை வறுத்தெடுத்த வானதி சீனிவாசன் !!!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., இன்று கணபதி பகுதி கோபால்சாமி கோவில் வீதியில் தீவிரத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், தி.மு.க அரசின் உள்ளாட்சி நிர்வாகத்தையும், கவுன்சிலர்களின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசியவர்,

கடந்த ஐந்து காலமாக மாநகராட்சியின் செயல்பாடுகளை பார்த்துக் கொண்டு உள்ளதாகவும், நகராட்சி நிர்வாக துறை  அமைச்சராக இருந்த எஸ். பி. வேலுமணி அண்ணன் காலத்தில் கோவையிலே சுகாதாரம் பேணப்பட்டு சாலைகள், மருத்துவமனைகள் ஒழுங்காக இருந்ததாகவும்,  ஆனால் கடந்த ஐந்துகளாக   தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் அனைவரும் கரூர் -காரருக்கு வசூல் ஏஜெண்டாக இருந்ததாகவும், மக்களுக்கு என்ன ? தேவை என்று பார்த்து செய்கின்றவர்கள் இல்லாதவர்கள் தான் இன்று கவுன்சிலராக இருந்து கொண்டு உள்ளதாகவும், ஆளுங்கட்சிக்காரர்களான  தி.மு.க ஆனால், தி.மு.க கட்சியினுடைய கவுன்சிலர்களால் இந்தப் பகுதி மக்களுக்கு ஏதாவது பிரயோஜனம் உள்ளதா ? என்று பாருங்கள் எங்கு ? பார்த்தாலும் குப்பைகள், சாலைகள் ஒழுங்காக இல்லை, எந்த வேலையைச் சொன்னாலும் காசு வாங்கிக் கொண்டு தான் செய்கின்றனர். அதனால் வீடு கட்டுவதற்கு தி.மு.க கவுன்சிலர்கள் கொள்ளை அடிப்பதை பார்த்து வீடு கட்டுவதா ? இல்லையா ? என்று தான் இருக்கிறது. இந்த நிலைமை மாறவில்லை என்றால் நமது அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வர வேண்டும் உள்ளாட்சியில் முழுவதும் நமது தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: