ஸ்டாலின் தொடரட்டும் : முதல்வர் பொது கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் ஏந்திய ஆதரவு பதாகைகள் - வைரலாகும் 'ஸ்லோகன்' !!!
கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கான தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார். தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான இந்த கூட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மைதானத்தில் திரண்டு வருகின்றனர். இந்த நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் எஸ்டிபிஐ (SDPI) கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் வித்தியாசமான முறையில் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.
"ஸ்டாலின் தொடரட்டும்" என்ற வாசகத்தின் ஒவ்வொரு எழுத்தையும் தனித்தனி பதாகைகளாக ஏந்தி, அவற்றை ஒன்றிணைத்து வரிசையாகப் பிடித்து நின்றனர். முதலமைச்சருக்கு ஆதரவாக அவர்கள் காட்டிய இந்த ஒருமித்த ஆதரவு காண்போரைக் கவர்ந்தது. பரப்புரை மைதானத்திற்கு வந்திருந்த பலரும் இந்த காட்சியைத் தங்களது செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் வைரலாகி வருகிறது.

0 கருத்துகள்: